Disha Patani: அறிவில்லாமல் யாரும் சினிமாவுக்கு வரல.. மோசமான கமெண்ட்களுக்கு திஷா பதானி பதில்
சென்னை: நடிகை திஷா பதானி இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக உள்ளார். நடிப்பில் மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காதவர் என்று ரசிகர்கள் பலரும் கூறும் அளவுக்கு கவர்ச்சி நாயகி. தமிழில் கங்குவா, தெலுங்கில் கல்கி என தென்னிந்திய படங்களிலும் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த வாரத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மிகவும் சோகமாக போஸ் கொடுக்க, அதற்காக ரசிகர்கள் வருத்தப்பட்டனர். அதன் பின்னர் திஷா பதானியின் வருத்தத்திற்கு அவரது ஆடை தான் காரணம், பொது இடங்களில் முறையாக சரி செய்து கொள்ள முடியாத ஆடைகள் ஏன் அணிந்து வரவேண்டும், இப்போது பாருங்கள் எல்லோர் முன்னாலும் மிகவும் தர்ம சங்கடத்துடன் நிற்க வேண்டியதாக மாறிவிட்டது என்று பதிவிட்டனர்.
இந்நிலையில் நெட்டிசன்களின் இந்த கமெண்ட்டுக்கு தனது ஸ்டைலில் திஷா பதானி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " நடிகைகள் ரசியுங்கள், அவரது ஆடைகளை மோசமாக விமர்சிக்காதீர்கள். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வரவில்லை" என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலடி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

இந்திய விமானப்படையில் விமானியாக வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்து வந்த திஷா பதானிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எல்லாம் அவரது எண்ணத்தில் இல்லவே இல்லாத ஒன்று. 2013-ம் ஆண்டு நடந்த 'ஃபெமினா மிஸ் இந்தியா' இந்தூர் போட்டியில் திஷா பதானி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதில் இருந்து தான் அவரது வாழ்க்கை மெல்ல மெல்ல சினிமாவை நோக்கி நகர்ந்தது.
கிளாமர் குயின்: திஷா பதானி படங்களில் எப்படி கிளாமராக நடிக்கிறாரோ, அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாரம் தவறாது பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார், 61.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவரது கிளாமர் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்டின்களையும் வாரி வழங்கி வருகிறார்கள்.

மோசமான கமெண்ட்: கடந்த வாரத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மிகவும் சோகமாக போஸ் கொடுக்க, அதற்காக ரசிகர்கள் வருத்தப்பட்டனர். அதன் பின்னர் திஷா பதானியின் வருத்ததிற்கு அவரது ஆடை தான் காரணம், பொது இடங்களில் முறையாக சரி செய்து கொள்ள முடியாத ஆடைகள் ஏன் அணிந்து வரவேண்டும், இப்போது பாருங்கள் எல்லோர் முன்னாலும் மிகவும் தர்ம சங்கடத்துடன் நிற்க வேண்டியதாக மாறிவிட்டது என்று பதிவிட்டனர்.
பதிலடி: இந்நிலையில் நெட்டிசன்களின் இந்த கமெண்ட்டுக்கு தனது ஸ்டைலில் திஷா பதானி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " நடிகைகள் ரசியுங்கள், அவரது ஆடைகளை மோசமாக விமர்சிக்காதீர்கள். கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வரவில்லை" என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலடி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











