நான் உலகின் 4வது அழகான பெண்ணா?: நெகிழும் ஐஸ்வர்யா ராய்

By Siva

மும்பை: உலகின் 4வது அழகான பெண்ணாக தன்னை தேர்வு செய்ததற்கு ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஹாலிவுட் பஸ் என்ற ஆன்லைன் பத்திரிக்கை உலகின் அழகான பெண்கள் குறித்த கணக்கெடுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் உலகம் முழுவதிலும் இருந்து 4 மில்லியன் பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இந்த கணக்கெடுப்பில் ஹாலிவுட் நடிகைகளே அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா, தீபிகா

ஐஸ்வர்யா, தீபிகா

ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே ஆகிய 2 பாலிவுட் நடிகைகள் மட்டும் தான் ஹாலிவுட் பஸ்ஸின் உலகின் அழகான 30 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஐஸ்

ஐஸ்

ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு படங்களில் நடிக்காமல் வெறும் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வருகின்றபோதிலும் அவர் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாகவே உள்ளார் என்பதையே இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

40 வயதாகும் தான் உலகின் நான்காவது அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டது பற்றி கேள்விப்பட்ட ஐஸ்வர்யா நெகிழ்ந்துவிட்டார்.

நன்றி

நன்றி

அத்தனை அழகான மற்றும் திறமையான பெண்களுடன் எனக்கும் வாக்களித்து தேர்வு செய்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X