தமிழில் வாய்ப்பு இல்லை... மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா
Recommended Video
சென்னை: தமிழ்ப் படங்களில் போதிய வாய்ப்பு இல்லாததால், தற்போது மீண்டும் தனது தாய் மொழியான மலையாளப் படங்களில் நடிக்க முடிவுசெய்துள்ளார் நடிகை ஓவியா. புதிதாக பிளாக் காபி என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
9 ஆண்டுகளுக்குப் பின் தன் தாய் வீடான மலையாளத் திரையுலகம் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் பிக்பாஸ் மூலம் ஆர்மி கொண்டு மிகவும் பிரபலமான ஓவியா. அங்கு அவர் பிளாக் காபி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஓவியா, மலையாளத் திரையுலகில் தான் அறிமுகமானார். தொடர்ந்து மலையாள படங்கள் அவருக்கு அமையவில்லை. அங்கு அவர் மூன்று படங்கள் நடித்த பின்பு தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

களவாணி ஓவியா
விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். களவாணி படத்தின் ஆரவாரமான வெற்றி அவரைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. குத்து பாட்டு ,கிளாமர் நடனம், விளம்பரங்கள் என்று படு பிஸியாக இருந்தார்.
ஓவியாவின் சிரிப்புக்கு காந்த பார்வைக்கும் எத்தனையோ பேர் மயங்கி உள்ளனர்.

பிக்பாஸ் ஓவியா
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை ருசிக்க முடியாமல் இருந்த ஓவியாவைத் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடித் தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம்.

ஓவியா ஆர்மி
உலகம் முழுக்க அவருக்கு ஓவியா என்ற பெயரில் ஆர்மிகள் அமைக்கப்பட்டு பல இளைஞர்கள் அதில் இணைந்து பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்று இப்பொழுது பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் முடங்கிவிட்டனர்.

தமிழில் வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றாலும் கூட, அடுத்து ஏனோ அவருக்குத் தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. நடுவில் வந்த 90 எம்.எல் என்ற அடல்ட் படம் அவரது செல்வாக்கை இன்னும் கொஞ்சம் காலி செய்தது. இடையில் கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த ஓவியா 2011ஆம் ஆண்டுக்குப் பின் தாய் மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.

மலையாள பட உலகம்
தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபுராஜ் இயக்கும் பிளாக் காபி படத்தில் இணைந்துள்ள இவர், படம் பற்றி கூறும் போது, இது ஒரு காதல் கதை. இதில் நான் ஒரு விளம்பர மாடலாக நடிக்கிறேன் என்றார்.

ஒரே படத்துடன் ஓவர்
எனது கதாபாத்திரம் தனது துறையில் முத்திரை பதிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உறவுச் சிக்கல்கள் குறித்தும் படம் பேசும். மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை.
என்றும் கூறியுள்ளார்.

நட்புக்காக மலையாத்தில் நடிப்பு
பாபுராஜ் தான் என்னை நடிக்கச் சொல்லி தூண்டினார். அவரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். மேலும், நல்ல கதை என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பற்றி கருத்து எதுவும் இன்னும் சொல்லாமல் அவருடைய ஆர்மியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மவுனம் காத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











