படையப்பா ரீ ரிலீஸ்.. செம வைபில் ஓவியா.. மேடம் பயங்கர கெத்துதான் போங்க

சென்னை: நடிகை ஓவியா தமிழில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் தொடர்ந்து நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கென்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. அதேபோல் பல விஷயங்களை அதிரடியாக செய்யக்கூடியவரும் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை சேர்ந்த ஓவியா தமிழில் சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்த களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக ரசிகர்கள் மட்டும் திரைத்துறையினரிடம் கவனம் பெற்ற ஓவியாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அப்படி அவர் நடித்த கலகலப்பு, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டானாலும் பெரிய பெயரை அவருக்கு பெற்று தரவில்லை.

பிக்பாஸில் ஓவியா: அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியது. அதில் போட்டியாளர்களில் ஒருவராக ஓவியாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு விளையாட ஆரம்பித்தார். முக்கியமாக அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவை பார்த்து ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என சொன்னது, ஜூலி, சக்தி ஆகியோரை அசால்ட்டாக டீல் செய்தது என ரசிகர்களை கவர்ந்தார்.

Oviya Creates Padayappa Vibe Here are Latest instagram post
Photo Credit:

ஓவியா ஆர்மி: அவர்கள் மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களையும் அப்படியே ஹேண்டில் செய்தார் அவர். அவரது விளையாட்டையும், குணத்தையும் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். ரசிகர்களாக மட்டுமின்றி அவருக்கென்று ஆர்மியையும் சோஷியல் மீடியாவில் ஆரம்பிக்கும் அளவுக்கு சென்றார்கள். கண்டிப்பாக அவர்தான் டைட்டில் அடிப்பார் என்று எதிர்பார்த்தால்; அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்த ஆரவ் அந்த சீசனில் டைட்டிலை அடித்து சென்றார்.

எதுவாக இருந்தாலும் போல்டுதான்: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க ஓவியாவின் வீடியோ என்று சொல்லி ஒரு வீடியோவும் வெளியானது. அதை வைத்து பலரும் பல விதமாக பேச; அதையும் கேஷுவலாக ஹேண்டில் செய்து கடந்து வந்தார். இப்போது பெரிய அளவில் சினிமாவில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

படையப்பா வைப்: அந்தவகையில் தான் புடவை கட்டி கூலிங் கிளாஸ் அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் ஓவியா; அதன் பின்னணியில் படையப்பா படத்தில் இடம்பெற்ற மின்சார கண்ணா பாடலின், 'என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா' என வரியை ஒலிக்கவிட்டிருக்கிறார். படையப்பா ரீ ரிலீஸாகியிருக்கும் இந்த நேரத்தில் அதன் பாடல் வரிகளை வைத்து செம வைப் செய்திருக்கிறார் ஓவியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X