பிக் பாஸ் வீடு வேணாம்.. பீச்சே போதும்.. பிகினியில் கடலையே சூடாக்கும் ஓவியா.. செம போட்டோஸ்!
சென்னை: நடிகை ஓவியா பிகினி உடையில் பீச்சில் எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பழைய சீசன் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றதுமே, ஒட்டுமொத்த ரசிகர்களும் ஓவியாவை மட்டுமே எதிர்பார்த்தனர்.
ஆனால், ஓவியா கலந்து கொள்ளாதது ரசிகர்களை பெரும் அப்செட்டில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஓவியா பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளன.

பிக் பாஸ் வேணா
நடிகை ஓவியா கண்டிப்பாக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்வார் என ஏகப்பட்ட டிராக்கர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த ஷோவை நடத்துபவர்களும் எப்படியாவது ஓவியாவை உள்ளே அழைத்து வர பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், கடைசி வரை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராமல் சில பல காரணங்களை சொல்லி தவிர்த்து விட்டார்.

ரம்யா பாண்டியன்
வைல்டு கார்டு என்ட்ரியாக ஓவியா வரப்போகிறார் என்றும் லாஸ்லியா வரப்போகிறார் என்றும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், கடைசியாக கடந்த 4வது சீசன் போட்டியாளரான ரம்யா பாண்டியனே மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளார்.

பீச்சில் பிகினியுடன்
இந்நிலையில், நடிகை ஓவியா பீச்சில் பிகினி உடையில் படு ஹாட்டாக குளித்து விளையாடும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதுவரை ஓவியா இப்படியொரு கவர்ச்சி தரிசனம் கொடுக்காத நிலையில், இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

கவலைகளை கடலில் கரையுங்கள்
நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப்படங்களுடன் சேர்த்து தத்துவங்களையும் சொல்லி வரும் நிலையில், நடிகை ஓவியா பிகினி உடையில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு, அதற்கு கேப்ஷனாக "Throw ur worries into the sea.." (கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்) என பதிவிட்டுள்ளார். ஓவியாவின் இந்த கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் வருத்தமடைய வேண்டாம் தலைவி என ஆறுதல் கூறி வருகின்றனர்.

வாய்ப்புகள் வரவில்லை
மலையாளத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஓவியா. நாளை நமதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியாவுக்கு விமல் உடன் அவர் நடித்த களவாணி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதன் பிறகு ஓவியா நடித்த பல படங்கள் சரியாக போகாத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பிக் பாஸுக்கு பிறகு காஞ்சனா 3 வாய்ப்பு கிடைத்தாலும், அந்த படமும் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. அதன் பிறகு ஓவியாவுக்கு பெரிய பட வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விட்டன. மீண்டும் பிக் பாஸில் கலந்து கொள்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் பங்கேற்கவில்லை. கூடிய விரைவிலேயே ஓவியாவுக்கு நல்ல பட வாய்ப்புகள் அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











