ஓவியாவை தவிர வேறு யாரும் 'இப்படி' சொல்ல மாட்டாங்க!
Recommended Video

சென்னை: பிக் பாஸ் பிரபலங்களான ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன் ஆகியோர் டாப் கியரில் செல்வது குறித்து ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா ஹீரோக்களுடன் டூயட் பாடுவதுடன், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்திலும் நடித்து வருகிறார்.
அவரின் கெரியர் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது.

யாஷிகா
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆகியோருக்கும் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. ஜனனி ஐயர் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மகத்தும் கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

ஓவியா
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா அளவுக்கு யாரும் பிரபலம் ஆனது இல்லை. இந்நிலையில் அவரின் கெரியரோ ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த நிலைமைக்கு அவரே காரணம். தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பது இல்லை.

கவலை இல்லை
சக பிக் பாஸ் பிரபலங்களின் கெரியர் எல்லாம் பிக்கப்பாகி வேகமாக செல்வதை பார்த்து ஓவியா பொறாமைப்படவில்லை மாறாக சந்தோஷப்பட்டுள்ளார். என் கெரியர் மெதுவாக செல்வதிலும் மகிழ்ச்சியே என்கிறார்.

பெருமை
அடுத்தவர்களின் வளர்ச்சியை பார்த்து மகிழும் ஓவியாவின் குணத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். இந்த மனசுக்காக தாங்க ஓவியாவை ரொம்ப பிடிக்கிறது என்கிறார்கள் அவர்கள்.


Click it and Unblock the Notifications











