"ஓவியா என் டார்லிங்"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை!

90 எம் எல் எனும் படத்தில் நடித்து வருகிறார் நடிகை மசூம் ஷங்கர்.

சென்னை: 90 எம்எல் படத்தில் நடித்து வரும் நடிகை மசூம் ஷங்கர், ஓவியா தான் தன்னுடைய டார்லிங் என தெரிவித்துள்ளார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் 90 எம்.எல். பெண் இயக்குனர் அனிதா உதீப் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் நடிகை மசூம் ஷங்கரும் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை மசூம் ஷங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, ஓவியா தன்னுடைய டார்லிங் எனக் கூறினார்.

பேட்டியில் அவர் கூறியதாவது:

அனிமேஷன்

அனிமேஷன்

நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் அனிமேஷன் முடித்தேன். கிரேட்டிவ் சைடுல என்னோட ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர்கள் நான் நல்ல அனிமேட்டர் ஆக வருவேன் என்று நினைத்தார்கள்.

ஈவென்ட்ஸ்

ஈவென்ட்ஸ்

ஆனால் எனது தோழியின் மூலமாக ஈவென்ட் துறையைப்பற்றியும், அதில் வரும் வருமானத்தை பற்றியும் தெரிந்துகொண்டேன், எனக்கு அதை முயற்சி பண்ணி பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது, ஆகையால் தொகுப்பாளினியாக நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். ஆனால் எனது பெற்றோர்கள் அனிமேட்டர் ஆகத்தான் ஆக வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஆனாலும் நான் ஈவென்ட் துறையிலேயே பணியாற்றி வந்தேன்.

தொடர்பு

தொடர்பு

இதன் மூலமாக எனக்கு "பந்த் பாஜா பாரத்" படக்குழுவிடம் தொடர்பு கிடைத்தது, இந்த தொடர்பின் மூலமாக சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன், பிறகு நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு "casting assistant" ஆகவும் பணிபுரிந்தேன், இவ்வாறாக 6 வருடம் கழிந்தது.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

'காந்திகிரி' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் போது நடிகர் ஓம் பூரி அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் பொழுது அவர் நீ உதவி இயக்குனராக இருக்கவேண்டாம் நடிக்க போ என்று கூறினார். அதன் பிறகு அவரது மனைவி சீமாவிடம் இருந்து ஒரு சீரியலில் நடிக்க அழைப்பு வந்தது அதைக்கேட்டதும் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஓம் பூரி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதன் பிறகு சில சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நாகேஷ் திரையரங்கம்'

நாகேஷ் திரையரங்கம்'

பிறகு எனது தோழியின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக அறிந்தேன், உடனே அதில் கலந்து கொண்டேன், ஆனால் பிட்னஸ் காரணமாக ரிஜெக்ட் செய்யப்பட்டேன். என்னை தயார் படுத்திக்கொண்டு மீண்டும் ஆடிஷன் சென்றேன் முதல்முறை என்பதால் பதட்டமாக இருந்தது, கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது ஆடிஷன் முடிந்து திரும்பினேன். சில நாட்கள் கழித்து நீங்கள் 'நாகேஷ் திரையரங்கம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கபட்டுள்ளீர் என்று எனக்கு அழைப்பு வந்தது, எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

ஜாலியான 90எம்எல் குழுவுடன் வேலை பார்ப்பது எப்படி இருக்கிறது..?

ஜாலியான 90எம்எல் குழுவுடன் வேலை பார்ப்பது எப்படி இருக்கிறது..?

90எம்எல் குழுவுடன் வேலை பார்ப்பது மிகவும் ஜாலியாக இருந்தது, பொதுவாக நிறைய நடிகைகள் இருந்தால் சின்ன சின்ன விஷயங்களில் சமாளிப்பது கஷ்டம் என எண்ணுவார்கள். ஆனால் அனிதா உதீப் எங்களுக்கு இயக்குனராக கிடைத்தது பாக்கியம் என்றே கூறலாம், ஏனென்றால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு இயக்குநராக மட்டுமல்லாது ஒரு தோழியாகவும், சகோதரியாகவும் சில சமயங்களில் அம்மாவாகவும் எங்களை பார்த்துக்கொள்வார்.

ஓவியா ஒரு டார்லிங்

ஓவியா ஒரு டார்லிங்

பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப அமைதியாக, சீரியஸ் ஆக இருக்கும் ஆனால் 90ml-ல் தினமும் நிறைய சிரிப்பு, ஜோக்ஸ் என கலகலப்பாக இருக்கும். ஓவியா ஒரு டார்லிங், அவரைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ரொம்ப அன்பானவர்.

மொழி பயம்

மொழி பயம்

ஆரம்பத்தில் எனக்கு இருந்த ஒரே பயம் மொழி தான். ஆனால் நான் விட்டுவிட வில்லை, தமிழ் மொழி 5000 வருடம் பழமை வாய்ந்தது அதன் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தால் அதை கற்றுக்கொள்ள விரும்பினேன். எனக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் அசிஸ்டன்ட்களை நான் சரியாக வசனத்தை உச்சரிக்கும் வரை விடமாட்டேன் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் அவர்கள் ரொம்ப அன்பானவர்கள் எத்தனை முறை கேட்டாலும் பொறுமையாக சொல்லித்தருவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X