சிரிப்பா வருது... மத்திய அரசை கலாய்த்த ஓவியா...வைரலாகும் பதிவு

சென்னை : தமிழில் நடிகர் விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்தார். இருந்தாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் முதலாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஓவியாவிற்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். ஓவியா ஆர்மியை துவக்கும் அளவிற்கு சமூக வலைதளங்களில் பிரபலமானார் ஓவியா. இந்த புகழ் காரணமாக அவருக்கு சில பட வாய்ப்புக்களும் கிடைத்தது.

மோடி அரசு பற்றி ஒரே வார்த்தையில்

மோடி அரசு பற்றி ஒரே வார்த்தையில்

இந்நிலையில் சமீபத்தில், சமூக வலைத்தில் ரசிகர்களிடம் நேரலையில் பேசினார் ஓவியா. அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஓவியா பதிலளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என

எல்லாம் சிரிப்பா இருக்கு

எல்லாம் சிரிப்பா இருக்கு

இதற்கு தன்னை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றை பதிலாக பதிவிட்டுள்ளார் ஓவியா. என்ன பண்றது சார்...எல்லாம் சிரிப்பா இருக்கு என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. ஓவியா பதிவிட்ட இந்த மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

ஓவியா மீது போலீசில் புகார்

ஓவியா மீது போலீசில் புகார்

இந்த ஆண்டு துவக்கத்திலும், வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்த போது, GoBackModi என்ற ஹாஷ்டாக்கை ஓவியா பதிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக நிர்வாகிகள், ஒவியா மீது போலீசிலும் புகார் அளித்தனர்.

 பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

பிரதமரை அவமதிக்கும் வகையில் ஓவியா நடந்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. ஓவியாவிற்கு எதிராக இவர்கள் ட்விட்டரிலும் கருத்து பதிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X