ஓவியாவுக்கு என்ன ஆச்சு?.. ரசிகர்கள் ரகளை.. அடப்பாவிகளா சும்மா தான் ட்வீட் போட்டேன் என கதறல்!

சென்னை: நடிகை ஓவியாவுக்கு என்ன ஆச்சு என அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருவார்.

இந்நிலையில், தற்போது ஓவியா போட்டு ஒரு ட்வீட் அவரது ரசிகர்களிடையே பல விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாழ்க்கைக்கு அர்த்தமில்லை

வாழ்வதற்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை என்ற அர்த்தத்தில் "Life has no meaning" என நடிகை ஓவியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ட்வீட் அவரது ஆர்மியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஓவியாவின் தீவிர ரசிகர்கள், ஓவியாவுக்கு என்ன ஆச்சு என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாங்க இருக்கோம்

ஓவியாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர் ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆச்சு, என்ன பிரச்சனை என குழம்பி வந்த நிலையில், ரசிகர் ஒருவர் மிகவும் சீரியஸாக கவலை படாதீங்க ஓவியா, நாங்க இருக்கோம். எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரியாகி விடும் என கமெண்ட் போட்டுள்ளார்.

அடப்பாவிங்களா

அந்த குசும்புக்கார ரசிகரின் கமெண்ட்டை பார்த்து, விஷயம் ஏதோ வில்லங்கம் என அனைவரும் நினைத்து விட போறாங்கன்னு நினைச்ச ஓவியா, அடப்பாவிங்களா அது வெறும் சிந்தனை துளி தான். எனக்கு ஒண்ணும் ஆகலை என உடனடியாக அலறியடித்துக் கொண்டு ரிப்ளை போட்டுள்ளார்.

நெஞ்சு பதறுது

ஓவியாவின் இந்த கமெண்ட்டை பார்த்து அப்படி தெளிவா சொல்லும்மா நெஞ்சு பதறுதுல என இன்னொரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் பிக் பிரேக்கிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நடிப்பில் வெளியான 90 எம்.எல் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், ஓவியாவுக்கு பெரியவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

நல்ல மனசு

உங்க நல்ல மனசுக்கு உங்களை யாரும் கஷ்டப்படுத்த மாட்டாங்க. நீங்க ஒரு விலைமதிக்க முடியாத பெண், நிச்சயம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை சோகம் எதுவா இருந்தாலும் சீக்கிரமே பறந்து போய் விடும் என இந்த ரசிகர் ஓவராக உருகி கமெண்ட் போட்டுள்ளார். ஆனால், இவரது கமெண்ட்டை ஓவியா கண்டுக்கவே இல்லை.

அப்பாடா

ஓவியாவுக்கு ஒண்ணும் இல்லை.. ஸ்லீப்பர் செல் மாதிரி இருக்கிற ஓவியா ரசிகர்கள் இன்னும் ஆக்டிவாகத்தான் இருக்கிறாங்களா என அவர் செக் பண்ணது ஒர்க்கவுட் ஆகிடுச்சு.. உங்களுக்கு ஒண்ணும் இல்லை என்ற சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு ரொம்ப தேங்ஸ் என வடிவேல் மீம் போட்டு இந்த ஓவியா லவ்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆரவ் படம்

ஆரவ் படம்

பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கும் பிக்பாஸ் இல்லத்தில் ஏற்பட்ட காதல், வெளியே வந்த பிறகு நட்பாக மாறியுள்ளது. ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ராஜபீமா படத்தில் நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தும் ராஜபீமாவில் நடித்துள்ளார். விரைவில் ஆரவ் - ஓவியா காம்பினேஷனை ரசிகர்கள் திரையில் காண உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X