ஓவியாவுக்கு என்ன கோபமோ தெரியல.. விஜய் மேனேஜர் கம்பெனியை இப்படி பொளந்துட்டாரே

சென்னை: நடிகை ஓவியா தமிழில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் தொடர்ந்து நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை. அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கென்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த ஓவியா தமிழில் சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்த களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக ரசிகர்கள் மட்டும் திரைத்துறையினரிடம் கவனம் பெற்ற ஓவியாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அப்படி அவர் நடித்த கலகலப்பு, மதயானைக்கூட்டம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டானாலும் பெரிய பெயரை அவருக்கு பெற்று தரவில்லை.

Oviya s Route Mafia Instagram Post Creates Huge Buzz on Social Media

பிக்பாஸில் ஓவியா: அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியது. அதில் போட்டியாளர்களில் ஒருவராக ஓவியாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டு விளையாட ஆரம்பித்தார். முக்கியமாக அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவை பார்த்து ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என சொன்னது, ஜூலி, சக்தி ஆகியோரை அசால்ட்டாக டீல் செய்தது என ரசிகர்களை கவர்ந்தார்.

Also Read
அஜித்தை கிண்டல் செய்த விஜய் ரசிகர்கள்.. ஏகே கொடுத்த செம ரிப்ளை.. நெத்தியடி பதிலா இருக்கே
அஜித்தை கிண்டல் செய்த விஜய் ரசிகர்கள்.. ஏகே கொடுத்த செம ரிப்ளை.. நெத்தியடி பதிலா இருக்கே

ஓவியா ஆர்மி: அவர்கள் மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களையும் அப்படியே ஹேண்டில் செய்தார் அவர். அவரது விளையாட்டையும், குணத்தையும் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். ரசிகர்களாக மட்டுமின்றி அவருக்கென்று ஆர்மியையும் சோஷியல் மீடியாவில் ஆரம்பிக்கும் அளவுக்கு சென்றார்கள். கண்டிப்பாக அவர்தான் டைட்டில் அடிப்பார் என்று எதிர்பார்த்தால்; அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்த ஆரவ் அந்த சீசனில் டைட்டிலை அடித்து சென்றார்.

எதுவாக இருந்தாலும் போல்டுதான்: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க ஓவியாவின் வீடியோ என்று சொல்லி ஒரு வீடியோவும் வெளியானது. அதை வைத்து பலரும் பல விதமாக பேச; அதையும் கேஷுவலாக ஹேண்டில் செய்து கடந்து வந்தார். இப்போது பெரிய அளவில் சினிமாவில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

விஜய் மேனேஜர் கம்பெனி பற்றி: தனது மனதில் தோன்றுவதை யாருக்கும், எதற்கும் அஞ்சாமல் பேசும் ஓவியா இப்போது விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமியின் ரூட் கம்பெனி குறித்து போட்டிருக்கும் பதிவு ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனது ஸ்டோரியில், 'ரூட் மாஃபியாவை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்' என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, அந்த ரூட் கம்பெனிதான் விஜய்க்கு சினிமாவிலும், அரசியலிலும் பக்கா ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தது என்றும்; திரைத்துறையில் அவர்கள் பல வேலைகளை செய்திருப்பதாக தகவல் பரவியது. முக்கியமாக பிரியங்கா மோகனுக்கு எதிராக ரூட் கம்பெனிதான் அதிக ட்ரோல்களை சோஷியல் மீடியாவில் செய்ய வைத்ததாகவும் ஒரு பேச்சு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X