என்ன ஓவியா டக்குனு இப்டி சொல்லிட்டீங்க.. அப்போ மருத்துவ முத்தத்துக்காக அழுதது பொய்யா?

திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லை என ஓவியா தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Oviya Marriage? : திருமணம் பற்றி அறிவிப்பை வெளியிட்டார் ஓவியா!- வீடியோ

சென்னை: திருமணம் பற்றிய ஓவியாவின் பேட்டி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

படங்களால் கூட கிடைக்காத அளவுக்கு மாபெரும் பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்றார் ஓவியா. அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியும் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனாலும் ஓவியா ஆர்மியை இன்னும் யாராலும் அசைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அந்தளவுக்கு அந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் ஓவியா.

ஓவியாவின் மருத்துவ முத்தம்

ஓவியாவின் மருத்துவ முத்தம்

பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதமே அவர் பிரபலமாக முக்கிய காரணமாக அமைந்தது. முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவைக் காதலித்தது, மருத்துவ முத்தம் பரிமாறிக் கொண்டது, காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது, பின்னர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

 ஓவியாவை போல்

ஓவியாவை போல்

அதற்கடுத்த சீசன்களிலும் ஓவியாவைப் போலவே பல போட்டியாளர்கள் நடந்து கொள்ள முயற்சித்தாலும், ஒரிஜினல் போல் அவர்களால் மக்களைச் சென்றடைய முடியவில்லை. ஓவியாவும், ஆரவ்வும் நிஜமாகவே காதலித்தார்களா? அல்லது டிஆர்பிக்காக காதலிப்பது போல் நடிக்க வைக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனாலும் நிஜத்திலும் ஓவியாவும், ஆரவும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

ஆரவ்வும், ஓவியா பிறந்தநாள் அன்று நேரில் சென்று வாழ்த்தி பரிசுகள் கொடுத்ததால், இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஓவியாவும் ஆரவின் ராஜபீமா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் நிஜமாகவே அவர்கள் காதலிக்கிறார்களா அல்லது நல்ல நண்பர்களா எனும் குழப்பம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும். அதுபோல ஒருநாள் எப்படியும் அவர்கள் உண்மையை சொல்வார்கள் என ரசிகர்கள் நம்பி வந்தனர்.

திருமணத்துக்கு 'நோ'

திருமணத்துக்கு 'நோ'

இந்த சூழ்நிலையில் காதல், திருமணம் குறித்து ஓவியா அளித்துள்ள பேட்டி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் திட்டமே தன்னிடம் இல்லை என ஓவியா கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூசாக உள்ளது. எதிர்காலத்தில் இந்த முடிவை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X