ஒருவழியா ஓவியாவுக்கு புதுப்படம் கிடைச்சிடுச்சு.. பட பூஜையில் ஆளே அடையாளம் தெரியாமல் இருக்காரே!
சென்னை: கங்காரு படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. 2007ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் அவர், தமிழில் 2010ம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் இன்றளவும் மலையாள நடிகைகளுக்கு மவுசு குறையாமல் இருந்து வரும் நிலையில், அந்த காலத்தில் ஓவியாவுக்கும் அதே மவுசு இருந்தது.
களவாணி, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே என வரிசையாக பல படங்களில் ஓவியா நடித்து வந்தார். ஆனால், அதன் பின்னர் ஓவியா நடித்த படங்கள் பெரிதாக ஓடாமல் போக அவருக்கு பட வாய்ப்புகள் அப்படியே குறைய ஆரம்பித்தன.

அந்த நேரத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கப்பட்ட நிலையில், அதில் கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து மீண்டும் மக்கள் மத்தியில் இடம்பிடித்தார் ஓவியா.
பிக் பாஸ்க்கு பிறகும் டல் தான்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்து வந்த ஓவியா தற்கொலை முயற்சியெல்லாம் செய்தாக அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பினர். அதன் பின்னர், பிக் பாஸ் குறித்து ஓவியா வெளியிட்ட ட்வீட்கள் எல்லாம் சர்ச்சையை கிளப்பின. ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த படம் சொதப்பிய நிலையில், ஓவியாவுக்கு மீண்டும் மிகப்பெரிய மார்க்கெட் சரிவு ஏற்பட்டது.
லீக்கான வீடியோ: காதலனுடன் ஓவியா உல்லாசமாக இருந்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் திடீரென லீக்கான நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் அந்த வீடியோவை டிஎம் பண்ணுங்க என பல இளைஞர்கள் ஓவியாவின் அந்தரங்க வீடியோவை பார்க்க 3 நாட்கள் சோஷியல் மீடியாவில் ஓவியா டிரெண்டானார். அதுதொடர்பான கேள்விகளுக்கு ஓவியா அளித்த தக் லைஃப் பதில்களும் அந்த வீடியோ டீப் ஃபேக் வீடியோ என்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஓவியாவின் புதுப்பட பூஜை: 2019ம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்காத ஓவியா மீண்டும் 2024ம் ஆண்டு பூமர் அங்கிள் படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், யூடியூபில் ஒரு வெப்சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். சேவியர் எனும் படத்தில் ஓவியா நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் பெரிதாக வரவில்லை. இந்நிலையில், புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஓவியா.
அடையாளமே தெரியல: நடிகை ஓவியா எப்போதுமே கிளாமராக டிரெஸ் அணிந்துக்கொண்டு இருக்கும் நிலையில், புதிய பட பூஜையில் கிராப் வெட்டிய தலையுடன் சேலை அணிந்துக் கொண்டு நீண்ட கை வைத்த ஜாக்கெட் எல்லாம் அணிந்து ஆளே அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஓவியாவா இது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











