Oviya: கையில் தம்முடன் கடற்கரையில் காத்து வாங்கும் நடிகை ஓவியா.. வீடியோ வேற லெவலில் இருக்கே!
பாண்டிச்சேரி: நடிகை ஓவியா என்றாலே அவரது ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அதைவிட, இணையவாசிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் ஓவியாவின் பல தக் லைஃப் மொமண்ட்ஸ் தான். இப்படியான நிலையில் ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கடற்கரையில் தம் அடித்துக் கொண்டு காத்து வாங்கிக் கொண்டு உள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஓவியா மலையாள சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் என்றாலும், அவருக்கு பேரும் புகழும் வாங்கிக் கொடுத்தது தமிழ் படங்கள்தான். குறிப்பாக தமிழில் அவர் முதன் முதலில் நடித்த களவாணி, மதயானைக் கூட்டம், மூடர் கூடம் போன்ற படங்கள் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்படியான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் இருந்தால்தான், டாக் ஆஃப் த டவுனாக இருப்பார் என்று எதுவும் இல்லை. இவரது சமூக வலைதள பதிவுகள் இவரை ட்ரெண்ட் செய்து விடுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட, ஓவியா தனது காதலருடன் தனிமையில் இருக்கும் வீடியோ என்ற பெயரில் 17 விநாடிகளுக்கு ஒரு வீடியோ லீக் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ, கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு ஓவியா ட்ரெண்டிங்கில் இருந்தார். இது மட்டும் இல்லாமல், இது தொடர்பாக ஓவியாவிற்கு நேரடியாக மெசேஜ் செய்து முழு வீடியோ கேட்ட இணையவாசிகளுக்கு, நெக்ஸ்ட் டைம் ப்ரோ என தக் லைஃப் பதில்களையும் கொடுத்தார்.

ஓவியா: இந்த வீடியோ தொடர்பாக ஓவியா புகார் அளித்தார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. ஓவியா படங்களில் நடிக்க வில்லை என்றாலும், அவருக்கான ரசிகர்கள் அப்படியே இருக்க காரணமே பிக் பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு, கிடைத்த ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்ற பெயரில் இப்போதும் உள்ளார்கள். ஓவியா என்றால் அவர்கள் அனைவரும் இணையத்தில் குழுமி விடுவார்கள்.
வீடியோ: இப்படியான நிலையில் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் கடற்கரையில் தனது தோழியுடன் காத்து வாங்கிக் கொண்டு இருக்கும் ஓவியா, அங்கு மீன் பிடிக்க வலைகளை சரி செய்து கொண்டு இருக்கும் மீனவ இளைஞர்களுடன் உரையாடுகிறார். இது மட்டும் இல்லாமல், கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த நாய்களுடன் ஓவியா விளையாடிக் கொண்டிருக்கிறார்.

சிகரெட்: மேலும் நடிகை தனது கையில் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு, அதை புகைத்துக் கொண்டு உள்ளார். ஓவியா தம் அடிப்பது, மது அருந்துவதும் ரசிகர்களுக்கு தெரியும் என்றாலும், இவ்வளவு ஸ்டைலா தம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஓவியா பகிர்ந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஓவியா தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











