பிக்பாஸ் பற்றி ஓவியா ட்வீட்… ஒன்றும் புரியாமல் புலம்பும் நெட்டிசன்ஸ்!
ஐஸ்வர்யா தத்தா என ஓவியா ட்வீட் செய்துள்ளார்
சென்னை: பிக்பாஸ் குறித்து ஓவியா ட்வீட் செய்தது பலரையும் குழப்பத்தில் தள்ளியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டிலை தட்டிச் செல்லப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
அம்சமான பொண்ணாக கொஞ்சல் தமிழ் பேசி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஐஸ்வர்யா சர்வாதிகார டாஸ்க் செய்யும் போது ஓவராக ஆட்டம் போட்டதால் ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள்.

அதனால், அவர் சீக்கிரம் வெளியேற்றப்படுவார் என எண்ணும்போது ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புக்கு மாறாக காப்பாற்றப்படுகிறார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யா வெளியேறுவார் என நினைத்தால், சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், நடிகை ஓவியா ட்வீட் செய்திருப்பது பலரையும் குழப்பமடையச் செய்துள்ளது. வெறுமெனே "ஐஸ்வர்யா தத்தா" என ட்வீட் செய்துள்ளார். அதனால், ஐஸ்வர்யாவுக்கு அதரவு எனச் சொல்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? அல்லது அவர்தான் வெற்றியாளர் என திட்டவட்டமாக அறிவிக்கிறாரா என புரியாமல் நெட்டிசன்கள் குழம்புகின்றனர்.
பிக்பாஸ் பிரபலமான ஓவியாவுக்கு அடுத்ததாக சிலுக்குவார்பட்டி சிங்கம், காஞ்சனா3, களவாணி 2 மற்றும் 90 மில்லி ஆகிய படங்கள் வரிசைகட்டியுள்ளன.


Click it and Unblock the Notifications