முதுகில் குத்தியவர்கள் பற்றி கவலையில்லை.. பயமும் இல்லை.. சாட்டையடி கொடுத்த ஓவியா
சென்னை: ஓவியா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு அதற்கு பிறகும் வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ பரவிவருகிறது.அதில் இருப்பது ஓவியாதான் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் ஓவியாவோ அதுகுறித்து தன்னிடம் கேட்பவர்களுக்கு தக் லைஃப் ரிப்ளை கொடுத்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
நடிகை ஓவியா தமிழ் திரைப்படங்களில் நடித்து ஃபேமஸ் ஆனதைவிடவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயங்கரமாக ஃபேமஸ் ஆனார். அதில் அவரது ஆக்டிவிட்டை பார்த்த ரசிகர்கள், ஓவியா பெயரில் ஆர்மியையும் ஆரம்பித்தார்கள். டைட்டிலை அவர்தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார் அவர். மேலும் சில படங்களில் நடித்தாலும் பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை.

ஓவியா வீடியோ: சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக ஓவியா வீடியோ என ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் அதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத அவர், அதுகுறித்து தன்னிடம் கேட்பவர்களுக்கு அசால்ட்டாக பதிலளித்து வருகிறார். இந்தச் சூழலில் ஓவியா கொடுத்த பழைய பேட்டி ஒன்றையும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர். சில காலத்துக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எனக்கு எதை நினைத்தும் பயம் இல்லை. ஏன் பேய்களுக்குக்கூட நான் பயந்தது இல்லை. சில மனிதர்கள் மட்டும் இதில் விதிவிலக்கு.
கவலையில்லை: என்னுடைய முதுகில் குத்தியவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. நம்முடைய வாழ்க்கையின் மீது மட்டும் கவனம் செலுத்துவது போதுமானது. எனக்கு அட்வைஸ் கொடுத்தாலும் பிடிக்காது. வாங்குவதும் பிடிக்காது. முக்கியமாக பெரிய செலிபிரிட்டி என்பதை எனது தலையில் நான் ஏற்றிக்கொள்ளமாட்டேன். வதந்திகளை நான் கண்டுகொள்வதில்லை. எனக்கு பிறர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்கும் பிடிக்காது. ஆனால் என்னை பற்றி பேசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.
என்னை மட்டும்தான் நம்புகிறேன்: என்னைப் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு மனநிம்மதி கிடைக்கும். சிலர் காசுக்காகவும் இப்படி பேசுவார்கள். பொதுவெளியில் வந்தாலே இவற்றை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதனால் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்; எழுதுங்கள். எனக்கு கவலை இல்லை. உலகம் அப்படித்தான். இவ்வுலகத்தில் நான் என்னை மட்டும்தான் நான் நம்புகிறேன். அதேசமயம் எல்லோரையும் நம்பாமலும் இருக்க முடியாது.
மோசமான நிகழ்வுகள்: எனக்கு யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவேதான் எனக்கு ஏமாற்றம் என்பது பெரிதாக இருக்காது. எனக்கு உண்மையாக இருப்பவர்களை ரொம்பவே பிடிக்கும்.வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா விஷயங்களிலிருந்து நம்மால் ஏதோவொன்றை கற்றுக்கொள்ள முடியும். நமக்கு நடக்கும் மோசமான நிகழ்வுகளிலிருந்தும் நம்மால் கற்றுக்கொள்ளமுடியும். அதுதான் பின்நாட்களில் நம்மை வேறொரு ஆளாக மாற்றும் என்பதை நம்புகிறேன். என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு மோசமான நிகழ்வுகள் வந்தாலும் பரவாயில்லை. அந்தப் பிரச்னையை நான் சமாளித்து வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











