»   »  மன்னிப்பு கேட்டார் பத்மப்பிரியா!

மன்னிப்பு கேட்டார் பத்மப்பிரியா!

Subscribe to Oneindia Tamil

மலையாள டப்பிங் கலைஞர்கள் குறித்து கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை பத்மப்பிரியா.

பாலக்காட்டு மாமி பத்மப்பிரியா, தமிழில் இரண்டு படங்கள் நடித்த கையோடு, மலையாளத்துக்குத் தாவினார். அங்கு நிறையப் படங்களில் நடித்துவருகிறார்.

பூர்வீக பூமி பாலக்காடு என்றாலும், பிறந்து வளர்ந்தது பெங்களூர் என்பதால் கன்னடம் மட்டுமே பத்மாவுக்கு அட்சர சுத்தமாக தெரியும். தமிழும்ஓகே. ஆனால், மலையாளத்தில் அவ்வளவு கமாண்ட் இல்லை. இதனால் மலையாளப் படங்களில் அவருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் டப்பிங் கலைஞர்களுக்குப் பதில் நானே பேசி நடித்தால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்றுகூறியிருந்தார். இதைக் கேட்டதும் மலையாள டப்பிங் கலைஞர்கள் சங்கம் கொதிப்படைந்தது.

உடனடியாக பத்மப்பிரியா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவருக்கு யாரும் டப்பிங் கொடுக்க மாட்டோம் என சங்கதின்தலைவரான பாக்கியலட்சுமி எச்சரித்தார்.

பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த பத்மப்பிரியா இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பத்மப்பிரியா,எனது சொந்தக் குரலில் பேசினால்தான் நடிப்பு சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் கூற வந்தேன். மற்றபடி பின்னணி பேசுவபர்களை குறைத்துநான் கூறவில்லை.

அவர்களின் பணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. எனினும் நான் பேசியது, நான் சொன்ன கருத்து யாரையாவது நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ பாதித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் மலையாளம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். அது எல்லா நடிகைக்கும் வரும் ஆசைதான் என்றார் பத்மப்பிரியா.

Read more about: padma priya asks apology
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil