twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெட்ட பேர் வாங்கும் பத்மப்ரியா தெனாவெட்டு நாயகியாக உருமாறி வருகிறார் பத்மப்ரியா.கனத்த உருவமாக இருந்தாலும், கன் மாதிரி இருக்கும் பத்மப்ரியா தவமாய் தவமிருந்து படம் மூலம் பிசி நடிகையாகி விட்டார்.பட்டியல் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக திறமை காட்டி வரும் பத்மப்ரியா, நடிப்பில் மட்டுமல்லாது,குணாதிசயங்களிலும் நல்ல பெயர் வாங்கி வருகிறார்.திறமை இருக்கும் இடத்தில் துடுக்குத்தனமும் இருக்கும் என்பார்கள். பத்மப்ரியாவிடம் வாய்த்துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகவேஇருக்கிறதாம். மண்டைக் கனத்துடன் அவர் நடந்து கொள்வதாக புலம்ப ஆரம்பித்துள்ளனர் கோலிவுட்காரர்கள்.கேரளத்தைச் சேர்ந்த தமிழரான பத்மப்ரியா, மாடலிங்கில் இருந்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். படித்தது பெங்களூரில். நடிப்பு மட்டும் எனது இலக்கல்ல, இயக்கமும் எனது லட்சியம் என்று கூறிவரும் பத்மப்ரியா தன்னை அறிமுகப்படுத்திய சேரனின்அலுவலகத்தில் தான் தங்கியிருக்கிறார்.இயக்கத்திற்கான அனைத்து டிப்ஸ்களை அவரிடம் பெற்று வருகிறார். இந் நிலையில் தமிழில் சமீபகாலத்தில் வெளியானதிரைப்படங்களைப் பார்த்து ஒரு அலசு அலசியுள்ளாராம்.அப்படி அலசும்போது சில படங்கள் குறித்து எக்குத்தப்பாக காமெண்ட்டும் அடித்துள்ளார் ப.ப்ரியா. அவரது வாயில் சிக்கியமுக்கிய படம் காதல். தமிழகத்தையே உலுக்கிப் போட்ட காதல் படத்தின் கதையை, இதெல்லாம் ஒரு கதையா, இப்படி ஒருசாதாரண கதை எப்படித்தான் ரசிகர்களைக் கவர்ந்ததோ, எனக்குப் புரியவே இல்லை. நம்ம ஜனங்களோட டேஸ்ட் ரொம்பபூவராக உள்ளது என்று ஊதி விட்டுள்ளார்.பத்மப்ரியாவின் இந்த காமெண்ட் இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் காதுகளுக்குப் போகஅவர்கள் கடுப்பாகிவிட்டார்களாம்.முளைச்சு மூணு இலை விடலே அதுக்குள்ளே இப்படி ஒரு அதிகப்பிரசங்கித்தனமா என்று அவர்கள் கருவிக் கொண்டுள்ளார்கள். இத்தோடு நிற்கவில்லை பத்மப்ரியா. தவமாய் தவிமிருந்து படத்தின்போது, சேரனிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு காட்சிஅமைப்புகளில் தலையிட்டார் என்றார்கள்.அதேபோல, இப்போது பட்டியல் படப்பிடிப்பின்போதும் இந்த சீன் இப்படி இருக்கலாமே, அப்படி இருக்கலாமே என்றுஅப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்த்திடம் கூறி வருகிறாராம். இலை விட்டவுடனேயே கிளை விட்டாக வேண்டும் என்ற வேகத்தில் பத்மப்ரியா இருப்பதில் தவறில்லைதான், ஆனாலும் தனதுலிமிட்டுக்குள் அவர் இருப்பதுதான் சினிமாவுக்கு நல்லது என்று கூறுகிறார்கள் கோலிவுட் நலம் விரும்பிகள்.சொல்றதை சொல்லிட்டோம்ப்பா..

    By Staff
    |
    தெனாவெட்டு நாயகியாக உருமாறி வருகிறார் பத்மப்ரியா.

    கனத்த உருவமாக இருந்தாலும், கன் மாதிரி இருக்கும் பத்மப்ரியா தவமாய் தவமிருந்து படம் மூலம் பிசி நடிகையாகி விட்டார்.பட்டியல் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக திறமை காட்டி வரும் பத்மப்ரியா, நடிப்பில் மட்டுமல்லாது,குணாதிசயங்களிலும் நல்ல பெயர் வாங்கி வருகிறார்.

    திறமை இருக்கும் இடத்தில் துடுக்குத்தனமும் இருக்கும் என்பார்கள். பத்மப்ரியாவிடம் வாய்த்துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகவேஇருக்கிறதாம். மண்டைக் கனத்துடன் அவர் நடந்து கொள்வதாக புலம்ப ஆரம்பித்துள்ளனர் கோலிவுட்காரர்கள்.

    கேரளத்தைச் சேர்ந்த தமிழரான பத்மப்ரியா, மாடலிங்கில் இருந்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். படித்தது பெங்களூரில்.

    நடிப்பு மட்டும் எனது இலக்கல்ல, இயக்கமும் எனது லட்சியம் என்று கூறிவரும் பத்மப்ரியா தன்னை அறிமுகப்படுத்திய சேரனின்அலுவலகத்தில் தான் தங்கியிருக்கிறார்.

    இயக்கத்திற்கான அனைத்து டிப்ஸ்களை அவரிடம் பெற்று வருகிறார். இந் நிலையில் தமிழில் சமீபகாலத்தில் வெளியானதிரைப்படங்களைப் பார்த்து ஒரு அலசு அலசியுள்ளாராம்.

    அப்படி அலசும்போது சில படங்கள் குறித்து எக்குத்தப்பாக காமெண்ட்டும் அடித்துள்ளார் ப.ப்ரியா. அவரது வாயில் சிக்கியமுக்கிய படம் காதல். தமிழகத்தையே உலுக்கிப் போட்ட காதல் படத்தின் கதையை, இதெல்லாம் ஒரு கதையா, இப்படி ஒருசாதாரண கதை எப்படித்தான் ரசிகர்களைக் கவர்ந்ததோ, எனக்குப் புரியவே இல்லை. நம்ம ஜனங்களோட டேஸ்ட் ரொம்பபூவராக உள்ளது என்று ஊதி விட்டுள்ளார்.

    பத்மப்ரியாவின் இந்த காமெண்ட் இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் காதுகளுக்குப் போகஅவர்கள் கடுப்பாகிவிட்டார்களாம்.

    முளைச்சு மூணு இலை விடலே அதுக்குள்ளே இப்படி ஒரு அதிகப்பிரசங்கித்தனமா என்று அவர்கள் கருவிக் கொண்டுள்ளார்கள்.

    இத்தோடு நிற்கவில்லை பத்மப்ரியா. தவமாய் தவிமிருந்து படத்தின்போது, சேரனிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு காட்சிஅமைப்புகளில் தலையிட்டார் என்றார்கள்.

    அதேபோல, இப்போது பட்டியல் படப்பிடிப்பின்போதும் இந்த சீன் இப்படி இருக்கலாமே, அப்படி இருக்கலாமே என்றுஅப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்த்திடம் கூறி வருகிறாராம்.

    இலை விட்டவுடனேயே கிளை விட்டாக வேண்டும் என்ற வேகத்தில் பத்மப்ரியா இருப்பதில் தவறில்லைதான், ஆனாலும் தனதுலிமிட்டுக்குள் அவர் இருப்பதுதான் சினிமாவுக்கு நல்லது என்று கூறுகிறார்கள் கோலிவுட் நலம் விரும்பிகள்.

    சொல்றதை சொல்லிட்டோம்ப்பா..

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X