»   »  பறக்கிறார் பத்மப்பிரியா!

பறக்கிறார் பத்மப்பிரியா!

Subscribe to Oneindia Tamil
இனிமேலும் சிறப்பான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டதால்இப்போது நடித்துக் கொண்டிருக்கும் சத்தம் போடாதே படம் கை கொடுக்காவிட்டால்வெளிநாட்டுக்குப் போய் செட்டிலாகி விட முடிவு செய்துள்ளாராம் பத்மப்பிரியா.

கோபிகா கால்ஷீட கொடுக்காததால் கடுப்பாகிப் போன சேரன், கேரளாவிலிருந்துகூட்டிக் கொண்டு வந்த கும் நாயகிதான் பத்மப்பிரியா. முதல் படத்தில் அடக்க,ஒடுக்கமாக நடிப்பில் அசத்தியிருந்த பத்மப்பிரியா, இரண்டாவது படத்திலேயேவிஸ்வரூபம் எடுத்தார் கிளாமரில்.

தவமாய் தவமிருந்து படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு பட்டியல் படவாய்ப்பு வந்தது. இப்படத்தில் நடிக்க சேரனிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்றுநடித்தார் பத்மப்பிரியா.

முதல் படத்திற்கு முற்றிலும் நேர் மாறாக படு கிளாமராக அவிழ்த்துப் போட்டுஆடியதால் ஆடியன்ஸ் மத்தியில் பத்மப்பிரியா மீது இருந்த இமேஜ் சுக்கு நூறாக சிதறிஅவரது கணக்குகள் தப்புக் கணக்காகிப் போய் விட்டன.

நம்ம உடம்புக்கு கிளாமர் காட்டினால் ஏராளமான படங்கள் வந்து குவியும் என்றுகணக்குப் போட்டுத்தான் பட்டியலில் பட்டையைக் கிளப்பியிருந்தார் பத்மப்பிரியா.ஆனால் அவர் நினைத்ததற்கு ஏறுமாறாக எல்லாம் நடந்தது.

படங்கள் வராதது ஒரு பக்கம், ஏகப்பட்ட வதந்திகள் மறுபக்கம் எனபத்மப்பிரியாவைப் போட்டு பிராண்டி எடுத்து விட்டன.

இதனால் ஒரு படம் கையில் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் சத்தம்போடாதே படம் பத்மாவைத் தேடி வந்தது.

வசந்த் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தைத்தான் பத்மா பெரிதும் நம்பியுள்ளார்.இதுவும் காலை வாரி விட்டு விட்டால் பேசாமல் வெளிநாட்டுக்கு போய் செட்டிலாகிவிடுவது என முடிவெடுத்துள்ளாராம்.

அம்மணி எம்.பி.ஏ படித்தவர், நடிக்க வருவதற்கு முன்பு சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில்சம்பளத்திற்கு வேலை பார்த்தவர் என்பது தெரியும்தானே! ஸோ, நடிப்பு வாய்ப்புகைவிட்டால் இருக்கவே இருக்கு வேலை என்ற தைரியத்தில்தான் இப்போதுகோலிவுட்டில் நடமாடி வருகிறார் பத்மா.

அதுசரி, ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்தை மடம்!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos