பிரியங்கா மோகனுக்கும் டார்ச்சர்?.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் பற்றி தவெகவில் இருந்தவரே இப்படி சொல்றாரே

சென்னை: நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரது கட்சி களம் காண்கிறது. இந்த நேரத்தில் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுவும், திரிஷாவுடன் அவர் ஜோடியாக வந்ததும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி குறித்து பலரும் விமர்சித்து பேசிவருகிறார்கள். அவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நடிப்பில் பிஸியாக இருந்த விஜய்; ரசிகர்களின் வேண்டுதலை ஏற்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் சில வருடங்களுக்கு முன்பே அவருடன் வருட கணக்கில் இருந்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு; புதியவர்களை தன் பக்கம் வைத்துக்கொண்டார். அவர்களில் புஸ்ஸி ஆனந்த்தும், ஜெகதீஷ் பழனிசாமியும் முக்கியமானவர்கள். இரண்டு பேரின் சொல்லை கேட்டுத்தான் விஜய் எந்த முடிவாக இருந்தாலும் எடுப்பார் என பேச்சுக்கள் பலமாகவே அடிபட்டன.

Paid Negativity Claims Former Spokesperson Targets Vijay s Manager Jagadish Palanisamy
Photo Credit:

ஜெகதீஷின் பங்கு: அரசியலை பொறுத்தவரை புஸ்ஸி ஆனந்த்தும், பெர்சனல் வாழ்க்கையில் ஜெகதீஷ் பழனிசாமியும் அவரை ஆட்டுவிக்கிறார்கள் என்பது அனைவரது கருத்து. முக்கியமாக ஜெகதீஷின் பெயர் அடிக்கடி வெளியே வரும். கோவையை சேர்ந்த அவர் சில வருடங்களுக்கு முன்பு விஜய்யுடன் சேர்ந்தார். அவரது வீட்டிலிருந்து மூன்றாவது வீடுதான் இவரது வீடு என்றும் சொல்லப்படுவதுண்டு. பெர்சனலாக தனக்கு எது வேண்டுமென்றாலும் ஜெகதீஷ் மூலம்தான் நிறைவேற்றிக்கொள்வாராம் தளபதி.

ரூட் கம்பெனி: ஜெகதீஷ் ரூட் என்ற கம்பெனியை நடத்திவருகிறார். பெயருக்குத்தான் அந்த கம்பெனிக்கு அவர் முதலாளி; அதில் இருப்பது முழுவதும் விஜய் பணம்தான் என விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷை வைத்து படத்தையும் அந்த கம்பெனி தயாரித்திருக்கிறது. அவை அனைத்துக்கும் மேலே அந்த கம்பெனியின் தலையாய வேலை என்னவென்றால்; விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்னை வந்தால்; உடனே விர்ச்சுவல் வாரியர்ஸை வைத்து சோஷியல் மீடியாவில் ஆதரவு போஸ்ட்டுகளை போடுவதும்; தளபதியை பாதுகாப்பதும்தானாம்.

Also Read
குந்தவையை வீட்டிலேயே குந்த வைங்க.. விஜய் விவகாரத்தில் திரிஷாவை தாக்கிய பார்த்திபன்.. எதிர்ப்பு வலுவாகுதே
குந்தவையை வீட்டிலேயே குந்த வைங்க.. விஜய் விவகாரத்தில் திரிஷாவை தாக்கிய பார்த்திபன்.. எதிர்ப்பு வலுவாகுதே

சங்கீதா பிரச்னையில்: இப்போது விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த பிறகு அவர் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்கு மூலக்காரணமே இந்த ஜெகதீஷும், டூட் கம்பெனியினரும்தான் என்பது ஒருதரப்பினரின் திட்டவட்டமான கருத்து. அதேபோல் தங்களுக்கு எதிலாவது ஒருவர் ஒத்துப்போகவில்லை என்றால்; அவர்களுக்கு எதிராகவும் இந்த மாஃபியா களமிறங்கி அவர்களை உண்டு இல்லை என செய்துவிடும் என்றும் சிலர் சொல்வார்கள். பிரியங்கா மோகனையும் இப்படி அவர்கள் டார்கெட் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் செய்தித் தொடர்பாளர் பேட்டி: இந்நிலையில் தவெகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மணிகண்டன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேடியில், "பெய்டு நெகட்டிவிட்டி என்று ஒன்று இருக்கிறது. அடுத்த ஆர்ட்டிஸ்ட் பற்றி, படம் பற்றி கேவலமான கருத்துக்களை இணையத்தில் பரப்பிவிடுவதுதான் அது. அதுமாதிரி விஜய் பிம்பத்துக்கு எதிராக போட்டியோ அல்லது ரூட்டுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலோ அவர்களை பற்றி எங்கு பார்த்தாலும் நெகட்டிவிட்டியை பரப்புவார்கள்.

பிரியங்கா மோகனுக்கும் அப்படி: பிரியங்கா மோகன் ரூட்டில்தான் இருந்தார். ஆனால் திடீரென வெளியேறிவிட்டார். உடனே அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்றும், அவரை பற்றி கேவலமாக கொச்சைப்படுத்துவது போன்ற விஷயங்கள் ஒரே நேரத்தில் வந்தன. இதுகுறித்து அவரே ஒருமுறை, 'இதையெல்லாம் பணம் கொடுத்துதான் செய்கிறார்கள். யார் பணம் கொடுத்து செய்கிறார்கள் என்பதை நான் சொல்லவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு யார் என்பது அவர்களுக்கே தெரியும்' என கூறியிருக்கிறார். அசுர வளர்ச்சியை குறுகிய காலத்திலேயே எட்டிவிட்ட ரூட் கம்பெனிதான் இதற்கு பின்னணியில் இருக்கிறது என்பது எல்லோருடைய கருத்து" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X