இளம் வயதில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டேன்... பமீலா பகீர்

By Sudha

கேன்ஸ் எனது மாஜி காதலரும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் என்று கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இதெல்லாம் நடந்தது இப்போது இல்லையாம். அவருக்கு 12 வயதாக இருந்தபோது இத்தனையும் நடந்தேறியதாம். அதேபோல அவர் 6 வயதில் இருந்தபோது பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளானாராம்.

ஒருமுறை அல்ல 2 முறை அவர் பலாத்காரம் செய்யப்பட்டாராம். அதில் ஒருமுறை அவர் கேங் ரேப்புக்குள்ளானாராம்.

பே வாட்ச் பமீலா...

பே வாட்ச் பமீலா...

பே வாட்ச் டிவி தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன். அதில் அவர் போட்ட கடற்கரைக் களியாட்டங்கள் அந்தக் கால இளசுகளின் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. பமீலாவும் கூட அதே பழைய பன்னீர் செல்வியாகத்தான் இருக்கிறார்.

இப்பெல்லாம் அடக்கம் அமரருள் உய்க்கும்...

இப்பெல்லாம் அடக்கம் அமரருள் உய்க்கும்...

ஆனால் இப்போது சற்று கவர்ச்சியை குறைத்து விட்டு பமீலா ஆண்டர்சன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, மனித உரிமைகள், பிராணிகள் நலனுக்காக குரல் கொடுப்பது என்று மாறி விட்டார்.

கேன்ஸ் விழாவில் பரபரப்பு

கேன்ஸ் விழாவில் பரபரப்பு

இந்த நிலையில் கேன்ஸ் பட விழாவுக்கு வந்திருந்த பமீலா அங்கு தனது கடந்த கால கசப்புகளை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

மனிதர்களை நம்பிக் கெட்டேன்

மனிதர்களை நம்பிக் கெட்டேன்

அவர் விழாவில் பேசுகையில், நான் மனிதர்களை நம்பிக் கெட்டேன். ஆனால் விலங்குகள்தான் எனக்கு உற்ற நண்பர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தன.

6 வயதில் பாலியல் சீண்டல்

6 வயதில் பாலியல் சீண்டல்

6 வயதிலேயே நான் பாலியல் ரீதியாக சீண்டுதல்களுக்குள்ளானேன். என்னைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட நபர்தான் இதைச் செய்தார். பின்னர் 12 வயதில் ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்யபப்பட்டேன். பின்னர் எனது மாஜி காதலர் மற்றும் அவரது நண்பர்களால் நான் கேங் ரேப் செய்யப்பட்டேன்.

இளம் வயதிலேயே பலமுறை

இளம் வயதிலேயே பலமுறை

இளம் வயதிலேயே நான் பலமுறை பாலியல் கொடுமைகளுக்குள்ளானேன்.

செத்துப் போக நினைத்தேன்

செத்துப் போக நினைத்தேன்

12 வயதிலேயே நான் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானபோது செத்துப் போக நினைத்தேன். எனக்கு இந்த உலகமே வெறுத்துப் போய் விட்டது. அப்போது நான் எனது சகோதரரின் நண்பரால் பலாத்காரம் செய்ய்பட்டேன்.

நண்பரின் தங்கை வீட்டில் வைத்து

நண்பரின் தங்கை வீட்டில் வைத்து

அந்த நண்பரின் தங்கை வீட்டுக்கு நான் போயிருந்தபோது வீட்டில் யாரும் இல்லை. எனக்கு முதுகு வலிக்கு மசாஜ் செய்வதாக கூறி அந்த நண்பர் என்னை மயக்கி பலாத்காரம் செய்து விட்டார். அந்த நபருக்கு வயது 25.

7 பேர் சேர்ந்து

7 பேர் சேர்ந்து

இந்த துயரத்திலிருந்து நான் மீண்ட பின்னர் எனது முதல் காதலர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரால் நான் கேங் ரேப் செய்யப்பட்டேன்.

விலங்குகள் தேவலாம்..

விலங்குகள் தேவலாம்..

இப்படி மனிதர்களால் வேட்டையாடப்பட்ட நான் விலங்குகள் பக்கம் திரும்பினேன். அவைதான் எனக்கு ஆறுதல் கொடுத்தன. என்னை அமைதிப்படுத்தின. நம்பிக்கையுடன் அவர்களிடம் நான் பழக முடிந்தது என்றார் பமீலா.

46 வயதில்

46 வயதில்

பமீலாவுக்கு இப்போது 46 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ரிக் சாலமோன் என்பவரை மணந்து பின்னர் விவாகரத்து செய்து தற்போது மறுபடியும் அவரையே மறுமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X