ஓ இதுதான் அந்தமான் ஜெயிலா.. இங்கே இவங்க என்ன பன்றாங்க.. ஊர் சுற்றும் பிரபல நடிகை!

சென்னை: பாக்யராஜ், ரஜினி படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வருபவர் சுஜிதா. தென்றல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது பிசியாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். இந்நிலையில், நடிகை சுஜிதா பிரபலமான ஜெயிலுக்குள் சென்றிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இவரது திடீர் விசிட்டை கண்டு அவரது ரசிகர்கள் ஏன் எதற்காக அங்கு சென்றிருக்கிறார் என பதற்றமடைகின்றனர்.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் சுஜிதா. இதைத்தொடர்ந்து கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என அனைவரது படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து முடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை இவர் தான். இதன் பிறகு, ஜீ தமிழில் ஒரு கை ஒரு ஓசை, விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன்டிவியில் தென்றல், பைரவி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர் சுஜிதா.

pandian-stores-serial-actress-sujitha-tour-fo-cellular-jail

திருமண வாழ்க்கை: கடந்த 2012ஆம் தயாரிப்பாளர் தனுஷை சுஜிதா திருமணம் செய்துகொண்டார். பின்பு சீரியல்களில் நடித்திருந்தாலும் குழந்தை குடும்பம் என்று வந்த பிறகு சீரியல்களுக்கு பிரேக் கொடுத்தார். பின்பு ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு தங்கையாக தோன்றினார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் அல்லது வீடியோக்களை பகிர்வார். சமீபத்தில் தனது மகனுடன் செய்த குறும்புத்தனங்களை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தார்.

அண்ணன் மரணம்: கடந்தாண்டு இதே மாதத்தில் அவரது அண்ணனும் இயக்குநருமான சூர்யகிரண் மரணம் சுஜிதாவை மிகவும் பாதித்திருந்தது. அண்ணனை இழந்து வாடிய சுஜிதா மிகவும் சோர்வடைந்த நிலையில், உருக்கமாக, அவர் என் அண்ணன் மட்டுமல்ல. என்னுடைய அப்பா, ஹீரோ என்றும் குறிப்பிட்டிருந்தார். பல வழிகளில் உன்னுடைய இருப்பு எங்களுடன் இருந்து கொண்டே இருக்கும். மறுபிறப்பு என்ற விஷயம் உண்மை என்றால் உங்களுடைய கனவு, சாதனைகள் எல்லாம் மீண்டும் உயிர் பெறட்டும் என உணர்ச்சி பொங்க தெரிவித்திருந்தார். இதற்கு திரை பிரபலங்கள் அவரது ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்தனர்.

அந்தமான் ஜெயில்: பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் முடிவுக்கு வந்த நிலையில், குடும்பத்துடன் நேரத்தை கழித்து வரும் சுஜிதா, பிடித்த இடங்களை சுற்றி பார்த்து வியந்து ரசித்து வருகிறார். அந்த வகையில், அந்தமான் சென்றிருக்கும் அவர், அங்குள்ள பிரபலமான செல்லுலார் ஜெயிலுக்குள் சென்று சுற்றி பார்க்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். காலா பானி சிறைச்சாலைகளிலேயே கொடூரமான சிறைச்சாலை செல்லுலார் ஜெயில் தான். பிரிட்டிஷ் காலத்தில் மிகக்கொடூரமான முறையில் இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற வரலாறும் இருக்கிறது. தற்போது இந்த சிறைச்சாலையை மக்கள் சுற்றிப்பார்க்கும் சுற்றுலாத்தலாமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஃபேமஸான சிறைச்சாலைக்கு சுஜிதாவும் சென்றிருப்பதால் இன்னும் பிரபலம் அடைந்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X