பராசக்தி ஹீரோயின் மட்டுமில்லை.. அமரன் பட ஹீரோயினையும் ஜோடியாக்கிய தனுஷ்.. மீண்டும் ஒரு ரவுடி பேபி!
சென்னை: சிம்பு படத்தில் நடித்த நடிகைகள் தனுஷ் படங்களிலும், தனுஷ் படங்களில் நடிக்கும் நடிகை சிம்பு படங்களில் நடித்த காலம் எல்லாம் சென்று தற்போது சிவகார்த்திகேயன் பட நடிகைகள் தனுஷ் பட ஜோடியாக மாறியுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் பராசக்தி பட ஹீரோயின்கள் தான் தனுஷின் அடுத்த பட ஹீரோயின்கள் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு புகைப்படங்களாகவே வெளியாகி விட்டன.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றதுமே சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஸ்ரீலீலா உடன் போட்டோஸ் வந்ததும் அப்செட்டான ரசிகர்கள் இப்போதான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
பராசக்தி ஹீரோயின்: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் இந்த ஜனவரி மாதம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ஸ்ரீலீலா. அடுத்ததாக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ஸ்ரீலீலா தான் ஜோடி என முதலில் அறிவிக்கப்பட்டு போட்டோக்கள் வெளியாகின. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஜி.வி. பிரகாஷிடம் இருந்து தப்பித்து விட்டோம் என்றும் தனுஷ் ரசிகர்கள் ஹேப்பியானார்கள்.
அமரன் ஹீரோயின்: ஸ்ரீலீலாவை தனுஷ் அருகே பார்த்ததும் அட போங்கய்யா அப்போ சாய் பல்லவி இல்லையா என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அட்லீஸ்ட் அந்த மிருணாள் தாகூரையாவது ரீல் ஜோடியாக ஆக்கியிருக்கலாம் என்றும் ஏகப்பட்ட பதிவுகள் கிளம்ப தற்போது கவலையே படாதீங்க இந்த படத்துல சாய் பல்லவியும் இருக்காங்க என தற்போது படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
மீண்டும் ரவுடி பேபி: சாய் பல்லவி அமரன் படத்தின் மூலம் பிரபலமாகி பாலிவுட்டில் ராமாயணா, அமீர்கான் மகன் படம் என நடித்து வந்தாலும், அவர் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக தனுஷ் உடன் மாரி 2 படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடனமாடிய ரவுடி பேபி பாடல் யூடியூபில் படைத்த சாதனைகள் எல்லாம் அனைவரும் அறிந்தது தான். மீண்டுமொரு ரவுடி பேபி ஆட்டம் மட்டும் இந்த படத்தில் ராஜ்குமார் பெரியசாமி வைத்து விட்டால் ரசிகர்கள் ஹேப்பி ஆகிவிடுவார்கள். தனுஷ், ஸ்ரீலீலா, சாய் பல்லவி என 3 பேரும் செம டான்ஸர்கள் என்பதால் கண்டிப்பாக அதற்கு வாய்ப்பு அதிகமாகவே இருக்கும் என்கின்றனர். அமரன் படத்தை மிஞ்சும் அளவுக்கு தனுஷுக்கு ஒரு படத்தை ராஜ்குமார் பெரியசாமி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











