பராசக்தி பாருங்க இல்லைனா பகவந்த் கேசரி பாருங்க.. ஆடியோ லான்ச்சில் ஜனநாயகனை கிண்டல் செய்த ஸ்ரீலீலா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருவது பற்றி தெளிவாக விளக்கிவிட்டார் சிவா. இது ஒருபக்கம் இருக்க ஸ்ரீலீலா அந்த விழாவில் பேசியதும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படம் சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படமாகும். இது முதலில் புறநானூறு என்கிற பெயரில் உருவாகவிருந்ததும்; அதில் சூர்யா நடிக்கவிருந்து வெளியேறியதும் அனைவரும் அறிந்ததே. சூர்யா நடிக்க வேண்டிய ரோலில் எஸ்கே நடித்திருப்பதால்; எப்படிப்பட்ட நடிப்பை டெலிவர் செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு அனைத்து ரசிகர்களுமே உச்சக்கட்ட ஆவலோடு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் தேதி ரிலீஸ்: முதலில் ஜனவரி 14ஆம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் வியாபார காரணத்துக்காக பத்தாம் தேதியே வெளியிடப்படுகிறது. அதற்கு முந்தைய நாளான ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படமும் வருகிறது. எனவே சிவாவுக்கும், விஜய்க்கும் போட்டி உருவாகிவிட்டதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்வார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். படத்துடைய ட்ரெய்லர் இன்று வெளியாகிறது.

Parasakthi Audio Launch Sreeleela s Original Matters Remark Triggers Talk Amid Jana nayagan Clash
Photo Credit:

இசை வெளியீட்டு விழா: சூழல் இப்படி இருக்க நேற்று பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மணிரத்னம், வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். விழாவில் பங்கேற்றவர்கள் பராசக்தி படம் பற்றியும் சிவா, சுதா கொங்கரா உள்ளிட்டோரை பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். முக்கியமாக, ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி வருவது குறித்து தெள்ளத்தெளிவாக விளக்கமும் அளித்தார் எஸ்கே.

ஸ்ரீலீலா பேச்சு: இந்நிலையில் விழாவில் ஸ்ரீலீலா பேசியதாக கூறப்படும் விஷயம் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதாவது, 'பராசக்தி படம் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. அனைவரும் வந்து அந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை பாருங்கள். அப்படி அதில் பார்க்க முடியாவிட்டால்; பகவந்த் கேசரி படத்தில் என்னுடைய நடிப்பை பாருங்கள். நான் எப்போதும் ஒரிஜினலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்' என கூறியதாக; நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களில் சிலர் பதிவிட்டுவருகிறார்கள். ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் ரசிகர்களோ, 'அவர் அப்படியெல்லாம் பேசவே இல்லை. எஸ்கே ரசிகர்கள் வேண்டுமென்றே சோஷியல் மீடியாவில் இதுபோல் கொளுத்தி போடுகிறார்கள்' என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

பகவந்த் கேசரி ரீமேக் ஜனநாயகன்: முன்னதாக, ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இப்படம் பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்பதை நூறு விழுக்காடு உறுதி செய்திருக்கிறது அந்த ட்ரெய்லர். இதனால் கொஞ்சம் அப்செட்டும் ஆகியிருக்கிறார்கள் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வினோத் மீது நம்பிக்கை இருப்பதால் நிச்சயம் ஜனநாயகன் ஹிட்டடிக்குமென நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X