செக்ஸ் வேணும்னா வச்சுக்குங்க.. குழந்தைங்க செக்ஸ பேரன்ட்ஸ் ஊக்குவிக்கனும்: நடிகை சர்ச்சை பேச்சு!

Recommended Video

செக்ஸ் பற்றி சர்ச்சையாக பேசிய நடிகை கங்கனா ரனாவத்-வீடியோ

மும்பை: குழந்தைகள் செக்ஸ் வைத்துக்கொள்வதை பார்த்து பெற்றோர் சந்தோஷப்பட வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமாகவுள்ளார்.

கங்கனா ரனாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் செய்தியாளர்களை 5க்கும் 10க்கும் அலைபவர்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

தலைவி படம்

தலைவி படம்

அதனை தொடர்ந்து சக நடிகையான டாப்ஸியிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் தலைவி படத்தில் நடிக்கவுள்ள கங்கனா, அண்மையில் மேக்கப் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா சென்று வந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பெற்றோர் ஊக்குவிக்கனும்

பெற்றோர் ஊக்குவிக்கனும்

இந்நிலையில் பிங்க்வில்லா செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள கங்கனா உடலுறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது பெற்றோர் தங்களின் குழந்தைகள் செக்ஸ் வைத்து கொள்ள விரும்பினால் அதற்கு தடை போடாமல் குழந்தைகள் பொறுப்பான செக்ஸ் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

செக்ஸ் வேணும்னா வச்சுக்கனும்

செக்ஸ் வேணும்னா வச்சுக்கனும்

இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, "உடலுறவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் உடலுறவை விரும்பும் போது அதை வைத்துக் கொள்ளுங்கள். வெறித்தனமாக இருக்காதீர்கள்.

காலம் மாறிவிட்டது

காலம் மாறிவிட்டது

செக்ஸ் வேண்டுமென்றால் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி உங்களிடம் கூறப்பட்ட ஒரு காலம் இருந்தது, உங்கள் உணர்ச்சிகள் அந்த நபரை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது. வரலாற்றில் படையெடுப்புகளால் மக்கள் அந்த எண்ணத்தில் இருந்தனர். நம்முடைய வேதங்கள் உடலுறவை அனுமதிக்கவில்லை.

என் பெற்றோர் அதிர்ச்சி

என் பெற்றோர் அதிர்ச்சி

குழந்தைகள் உடலுறவு கொள்வதைப் பார்த்து பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்பான உடலுறவு கொள்ள வேண்டும். நான் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு என் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் குழந்தைகளை உடலுறவு கொள்ள ஊக்குவிக்க வேண்டும்," இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பரபரப்பு

பரபரப்பு

கங்கனாவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் ஜட்ஜ்மென்டல் ஹை க்யா படத்தில் நடித்திருந்தார், இந்தப்படத்தில் ராஜ்கும்மர் ராவ், ஜிம்மி ஷெர்கில் மற்றும் அமிரா தஸ்தூர் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் கங்கனாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X