ராஜமவுலி படத்தில் நடிக்க ஓவராக சம்பளம் கேட்கும் தங்கச்சி நடிகை?

By Siva

ஹைதராபாத்: ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க பரினீத்தி சோப்ரா பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறாராம்.

பாகுபலி 2 படத்தை அடுத்து ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

Parineeti Chopra demands huge sum to act in RRR?

சாரா அலி கான், ஆலியா பட், கியாரா அத்வானி, ராஷி கன்னா ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

பரினீத்திக்கு கதை பிடித்துவிட்டதாம். ஆனால் பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம். தங்களின் ஷூட்டிங் திட்டம் வீணாகக் கூடாது என்பதால் பரினீத்தி கேட்கும் தொகையை கொடுக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாம்.

விரைவில் ஒப்பந்தத்தில் பரினீத்தி கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

மற்றொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர். படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X