பிரியங்கா சோப்ரா தங்கச்சி கர்ப்பமா இருக்காரா?.. பரிணீத்தி சோப்ரா போட்ட போஸ்ட்டை பாருங்க!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை முறை உறவினரான பரிணீத்தி சோப்ராவை ஆம் ஆத்மி எம்பி ராகவ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், பரிணீத்தி சோப்ரா கர்ப்பமாக இருக்கிறாரா என சோஷியல் மீடியாவில் கேள்விகள் கிளம்பிய நிலையில், போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் பரிணீத்தி சோப்ரா.
தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பாலிவுட்டில் பிரபலமான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நிக் ஜோனஸ் எனும் இளம் அமெரிக்க பாடகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக மாறிய பரிணீத்தி சோப்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.
பிரியங்கா சோப்ரா தங்கச்சி: நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தங்கச்சி முறை தான் நடிகை பரிணீத்தி சோப்ரா. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பிரியங்கா சோப்ரா வலம் வரும் நிலையில், பரிணீத்தி சோப்ராவும் கடந்த 2011ம் ஆண்டு ரிலீஸான லேடீஸ் vs ரிக்கி பால் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கில் தில், டிஷூம், கோல்மால் அகைன், நமஸ்தே இங்கிலாந்து, கேசரி, தி கேர்ள் ஆன் தி டிரைன், சாய்னா, கோட் நேம் திரங்கா, உன்சாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் பரிணீத்தி சோப்ரா.
அரசியல்வாதியுடன் திருமணம்: பரிணீத்தி சோப்ரா ஆம் ஆத்மி கட்சி எம்பியான ராகவ் சத்தா உடன் மும்பையில் பல இடங்களில் சுற்றித் திரிந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இருவரும் டேட்டிங் செய்கின்றனரா என்கிற கேள்வியை எழுப்பியது. ஆரம்பத்தில் அதை இருவரும் மறுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

கர்ப்பமாக இருக்கிறாரா?: நடிகை பரிணீத்தி சோப்ரா கணவருடன் ஹனிமூன் சென்ற போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக ஆள் அட்ரஸே தெரியாமல் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் மீண்டும் அவர் மும்பையில் தென்பட்டுள்ளார். அவரை பார்த்த பலரும் லூஸான உடைகளை அணிந்துக் கொண்டு அவர் இருந்ததை பார்த்து கர்ப்பமாக இருக்கிறாரா? என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
பரிணீத்தி பதிலடி: லூசான ஆடைகளை அணிந்தால் போதும் உடனடியாக கர்ப்பம் என கதையை கிளப்பி விட்டு விடுவார்கள் என்று போஸ்ட் போட்டு தான் கர்ப்பமாக இல்லை என்பதை கூறியுள்ளார் பரிணீத்தி சோப்ரா. கஃப்தான் உடை அணிந்தால் கர்ப்பம், பெரிய சட்டை அணிந்தால் கர்ப்பம், இந்தியன் குர்த்தா அணிந்தால் கர்ப்பம் என கிளப்பி விடுகின்றனர் என காமெடியாக கலாய்த்து போஸ்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











