நீங்க ஏன் மூக்குத்தி போடல? உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.. ரசிகர்கள் கலாயில் பிரபல ஹிரோயின்

By

சென்னை: நடிகை பரினீதி சோப்ரா மாலத்தீவில் இருந்து எடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரினீதி சோப்ரா. இவர் லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால், சுத் தேஸி ரொமான்ஸ், ஹசி தோ பஸி, கில் தில், திஷூம் , மேரி பியாரி பிந்து, கோல்மால் எகைன், கேசர் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்போது சந்தீப் அவுர் பிங்கி ஃபரார், த கேர்ள் ஆன் த டிரைன் உட்பட சில படங்களில் நடித்துவருகிறார். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக் கதையான சாய்னா படத்தில் நடிக்கிறார்.

மாலத்தீவு

மாலத்தீவு

இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் கமென்ட்களை அள்ளித் தெளிப்பார்கள். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ளார். தனது இரண்டாவது வீடு என்று மாலத்தீவை வர்ணித்துள்ள அவர், எனக்கு கொஞ்சம் கடல் கொடுங்கள், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

மாலத்தீவில் இருந்து அவர் எடுத்துள்ள ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வழக்கம் போல பதிந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரது புகைப்படங்களை லைக் செய்துள்ளனர். சிலர் ஓவராக வழிந்து அவர் அழகை ரசித்து வர்ணித்துள்ளனர்.

மூக்குத்தி போட்டீங்கன்னா

உங்கள் படங்களை தினமும் பார்த்து மயங்குகிறேன் என்பது போன்ற வழியும் கமென்ட்களை சில ரசிகர்கள் வாரி தெளித்தாலும் சிலர், பரினீதியின் அழகை மெருகூட்ட ஐடியா கொடுத்து வருகின்றனர். நீங்க ஏன் மூக்கு குத்திக்கல? என்று கேட்டுள்ள ரசிகர் ஒருவர், மூக்குத்தி போட்டீங்கன்னா, இன்னும் அழகா தெரிவீங்க... இது நிஜம் என்று அட்வைஸ் பண்ணியுள்ளார்.

தொப்பிக்குள்ள யாரு

உங்க சிரிப்பு உயிரோட்டமாக இருக்கு என்று ஒரு ரசிகை சொல்ல, இன்னொரு கலாய் ரசிகர், நீங்க தனியாவா போயிருக்கீங்க? என்று கேட்டுள்ளார். மற்றொருவர், நீங்க ஏன் அண்டர்வாட்டர் ரைட் போகலை? என்று விசாரித்துள்ளார். 'ஏம்மா, உங்ககிட்ட இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன் என்று ஒருவர் சொல்ல, நீங்க இயற்கையாகவே அழகா இருக்கீங்க... அப்புறம் எதுக்கு இந்த மாதிரி டிரெஸ்? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X