சே.. நான் 'ஸ்டன்னிங்' அழகுடன் இல்லையே... இப்படிக்கு ‘ஏஞ்சல்’ ப்ரிணீதி சோப்ரா!

மும்பை: க்யூட் நாயகியான ப்ரிணீதி சோப்ரா, 'நடிகைகளுக்கே உரிய முகவசீகரம் தன்னிடம் இல்லை' என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

விரைவில் ப்ரிணீதி சோப்ரா நடிப்பில் தவாத் இ இஷ்க் படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டார் ப்ரிணீதி.

லுக் ஹூ இஸ் டாக்கிங் வித் நிரஞ்சன்' என்ற அந்த நிகழ்ச்சியில் தான் முக வசீகரம் இன்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ப்ரிணீதி.

மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் தைரியசாலி தான்...

நான் தைரியசாலி தான்...

மனதளவில் நான் மிகவும் தைரியமான பெண். ஆனால், புறத்தோற்றத்தில் நான் நடிகைக்குரிய வசீகரம் இன்றி இருப்பதாக உணர்கிறேன்.

கவரும் தோற்றமில்லை...

கவரும் தோற்றமில்லை...

பொதுவாக திரையில் தோன்றும் நடிகைகள் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நான் அவ்வாறு இல்லை என நினைக்கிறேன்.

நிர்ப்பந்தம்...

நிர்ப்பந்தம்...

எனவே, நடிகையாக என்னை நான் நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரிணீதி இவ்வாறு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

காதலிப்பேன்...

காதலிப்பேன்...

மேலும், காதல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘தற்போதைக்கு நான் காதலில் விழவில்லை. ஆனால், கூடிய விரைவில் காதலிப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன்.

பாய்பிரண்ட் வேணும்...

பாய்பிரண்ட் வேணும்...

என் வாழ்க்கையில் பாய் ப்ரெண்ட் வேண்டும் என நான் விரும்புகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெண் சுதந்திரமில்லை...

பெண் சுதந்திரமில்லை...

அதேபோல இன்னொரு ஆங்கில இதழுக்கு ப்ரிணீதி சோப்ரா அளித்துள்ள பேட்டியில், ‘இங்கு ஆண்கள் இரவில் கூட சுதந்திரமாக நடமாட முடியும். ஆனால் பெண்களால் அப்படி முடிவதில்லை.

வெட்கம்....

வெட்கம்....

பெண் என்றால் இளக்காரம், பாலியல் தேவைகளுக்கான வடிகாலாக மட்டுமே பார்க்கிறார்கள். பெண்ணாக பிறந்ததற்காக நான் பல நேரங்களில் வெட்கப்பட்டுள்ளேன்.. என்றும் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X