குந்தவையை வீட்டிலேயே குந்த வைங்க.. விஜய் விவகாரத்தில் திரிஷாவை தாக்கிய பார்த்திபன்.. எதிர்ப்பு வலுவாகுதே

சென்னை: திரிஷாவும், விஜய்யும் ஒன்றாக திருமணத்துக்கு வந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பொதுமக்களும், தவெகவினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள். இப்போது திரைத்துறைக்குள்ளேயே இதுகுறித்து ஓபனாக பேச தொடங்கிவிட்டார்கள். முதலில் சமுத்திரகனி சக இயக்குநர்களிடம் இதுபற்றி காட்டமாக பேசியிருந்தார். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இந்த விவகாரம் தொடர்பாக ஓபன் ஸ்டேஜிலேயே பேசிவிட்டார்.

சங்கீதா விவாகரத்து மனு கொடுத்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக திருமணத்துக்கு வந்தார்கள். அதுமட்டுமின்றி ஒரே நிறத்திலான உடையை அணிந்து வந்தது; ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு விதை போட்டிருக்கிறது. தனது விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாவாகத்தான் இருப்பார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்; அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யின் செயல் அமைந்துவிட்டதாக அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.

Parthiban Reacts to Trisha Vijay Wedding Controversy His Remark Goes Viral
Photo Credit:

முட்டு கொடுக்க முடியாது: அதுமட்டுமின்றி இந்த விஷயத்தில் எப்படி எங்களால் முட்டு கொடுக்க முடியும் என அக்கட்சியினரின் புலம்பல் அடங்குவதற்குள்ளாகவே; விஜய் தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார். நான் தங்குவதற்கு அவர் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை பார்த்த கட்சியினரோ; இருக்கும் பிரச்னையில் இது வேறயா; எங்களால் முடியவில்லை விஜய் அண்ணா எனவும் பதிவுகள் தென்படுகின்றன.

அவ்வளவு வொர்த் இல்லை: இவை அனைத்துக்கும் விஜய் வாயை திறந்து பேசி முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் நேற்று சென்னையில் நடந்த தவெக மகளிர் அணி கூட்டத்தில் பேசிய விஜய், 'சமீபமாக ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக நீங்கள் போராடி ஹர்ட் ஆகுகிறீர்கள். அதை பார்த்து எனக்கும் ஹர்ட் ஆகிறது. நீங்கள் ஃபீல் செய்யும் அளவுக்கு அதெல்லாம் அவ்வளவுக்கு வொர்த் இல்லை. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என கூறினார்.

Also Read
மூன்று வேளை சோத்துக்கு பாடு.. புலம்பிய விஜய்.. அட இப்படியும் ஃபீல் செஞ்சிருக்காரா?
மூன்று வேளை சோத்துக்கு பாடு.. புலம்பிய விஜய்.. அட இப்படியும் ஃபீல் செஞ்சிருக்காரா?

இவ்வளவு அலட்சியமா?: இதை பார்த்த பலரும்; இதற்கு இவர் வாயையே திறக்காமல் இருந்திருக்கலாம். தன்னை நம்பி வந்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகளை பெற்ற பெண்; கதறிக்கொண்டிருக்கிறார். இவரோ மகளிருக்கு திட்டங்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறார்; அந்தப் பிரச்னை வொர்த்தே இல்லை என்று சொல்கிறார்; இவரெல்லாம் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறார். இவ்வளவு அலட்சியமாக பேசுகிறாரே என விமர்சனங்கள் சகட்டு மேனிக்கு பாய தொடங்கியிருக்கின்றன. இதையும் சமாளிக்க முடியாமல் விர்ச்சுவல் வாரியர்ஸ் திணறுகிறார்கள்.

திரைத்துறையில் பேச்சு: இத்தனை நாட்கள் திரைத்துறையிலிருந்து விஜய் - சங்கீதா - திரிஷா விஷயம் பற்றி ஓபனாக பேசாமல் இருந்தார்கள். ஆனால் நேற்றிலிருந்து அவர்களும் வாயை திறக்க ஆரம்பித்துவிட்டார்கள். முதலில் சமுத்திரகனி இதுகுறித்து காட்டமாக பேசியிருந்தார். அது வைரலானது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஓபன் ஸ்டேஜிலேயே இதுபற்றி பேசியிருக்கிறார். விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து ஏதாவது கவிதை சொல்லுங்கள் என கேட்கப்பட்டது.

குந்தவையை குந்த வைங்க: அதற்கு அவர், 'குந்தவையை குந்த வைங்க.. அதாவது இந்தக் குந்தவையை வெளியே வராமல் கொஞ்ச நாளுக்கு வீட்டுக்குள்ளேயே குந்த வைப்பது நல்லது. நிறைய பிரச்னைகளை உண்டாக்காமல் இருக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர்த்து கவிதை சொல்லாமல் இருப்பது பெட்டர் என்று நினைக்கிறேன்' என்றார். திரைத்துறையிலும் இப்படி சிலர் ஓபனாக பேச தொடங்கிவிட்டதால் தவெகவினரும், திரிஷா ரசிகர்களும் கலங்கி போயிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X