ஓலா கேபை யாரும் நம்பாதீங்க: கொந்தளிக்கும் தனுஷ் பட நடிகை
பெங்களூர்: ஓலா கேபில் சென்ற தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் நடிகை பாருல் யாதவ்.
தனுஷின் ட்ரீம்ஸ் படம் மூலம் நடிகையானவர் பாருல் யாதவ். பிரசாந்தின் புலன் விசாரணை 2 படத்திலும் நடித்துள்ள பாருல் தற்போது கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
படங்கள் தவிர்த்து இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

பெங்களூர்
ஓலா கேபில் பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார் பாருல் யாதவ். வழியில் அவர் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்துள்ளார்.

கைக்கடிகாரங்கள்
திரும்பி வந்தபோது கேபில் தான் வைத்துவிட்டுச் சென்ற விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் அடங்கிய பாக்கெட் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பாருல்.

டிரைவர்
கைக்கடிகாரங்கள் இருந்த பாக்கெட் எங்கே என்று கேட்டதற்கு ஓலா டிரைவர் எனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்துள்ளார். இதையடுத்து பாருல் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார்.

மீட்பு
போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த டிரைவரிடம் இருந்து கைக்கடிகாரங்களை மீட்டு பாருல் யாதவிடம் அளித்துள்ளனர். யாரும் ஓலா கேபை நம்ப வேண்டாம் என்று பாருல் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











