»   »  பார்வதி மெல்டனும் ஸ்ரீகாந்த்தும்

பார்வதி மெல்டனும் ஸ்ரீகாந்த்தும்

Posted By:
Subscribe to Oneindia Tamil


மலையாளத் திரையுலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் பார்வதி மெல்டன், தமிழ் ரசிகர்களையும் மெல்ட் ஆக்க தமிழுக்கு வருகிறார்.

Click here for more images

மலையாளத் திரையுலகில் வளரும் இளம் நடிகை பார்வதி மெல்டன். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு. தமிழிலும் இவரைப் பிடித்துப் போட முயற்சிகள் நடந்து வந்தன.

இந் நிலையில் ஒரு வழியாக தமிழுக்கு வருகிறார் பார்வதி. அவர் நடிக்கப் போகும் படத்துக்கு பூ என்று மென்மையான பெயரைச் சூட்டியுள்ளனர். சொல்லாமலே என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த சசி இயக்கப் போகிறார்.

நீண்ட தேடலுக்குப் பின்னர் பார்வதியை சூஸ் செய்துள்ளாராம் சசி. கல்யாண களேபரங்களுக்குப் பின்னர் புதிய படங்களில் புக் ஆகாமல் இருந்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பார்வதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த்தும், சசியும் இணைவது இது 2வது முறையாகும். இருவரும் இணைந்து கொடுத்த முதல் படம் ரோஜாக் கூட்டம். அதுதான் ஸ்ரீகாந்த்தின் முதல் படமும் கூட. சசிக்கு இது மொத்தத்தில் தமிழில் நான்காவது படம்.

ரோஜாக் கூட்டம் மூலம் தமிழுக்கு வந்த ஸ்ரீகாந்த், இப்போது தனது மறு வருகையையும் சசி மூலமாகமே அரங்கேற்றுகிறார்.

எஸ்.எஸ்.குமரன் என்ற புதிய இசையமைப்பாளர் இப்படத்தின் மூலம் இசையமைக்க வருகிறார். கேமராவை சக்தி சரவணன் கவனிக்கிறாராம்.

பார்வதிக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் பூ நறுமணத்தைக் கொடுக்கட்டும்.

Read more about: parvathy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil