2500 கிலோ அரிசி.. பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை.. அஜித் பட நடிகையின் தாராள மனசு!
சென்னை: சினிமா தொழிலாளர்கள் சங்கத்திற்கு பல பிரபலங்கள் உதவி செய்து வரும் நிலையில், நடிகை பார்வதி நாயரும் கொரோனா நிவாரணம் வழங்கியுள்ளார்.
Recommended Video
கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருப்பார்.

மலையாள நடிகையான பார்வதி நாயர், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நிமிர் மற்றும் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கி உள்ளார்.
மேலும் FEFSI தொழிலாளர்களின் பசியை போக்க, 1500 கிலோ அரிசியும், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு 1000 கிலோ அரிசியும் வழங்கி உள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சாக்ஷி அகர்வால் மற்றும் பிரசன்னாவுடன் இணைந்து அந்த ரியாலிட்டி ஷோவை நடத்தினார்.
சமீபத்தில் நடிகர் அஜித் 1.25 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிலையில், அஜித் பட நடிகையும் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார் என தல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











