இடுப்பை வளைத்து நெளித்து தாமரையுடன் மல்லுக்கட்டும் பார்வதி நாயர்... வைரலாகும் வீடியோ
கொச்சி : தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார் பார்வதி நாயர்.
தற்போது கோலிவுட்டில் வைபவ்வுடன் இணைந்து ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ட்விட்டரில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வைபவ்வுடன் ஆலம்பனா
நடிகை பார்வதி நாயர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து தற்போது வைபவ்வுடன் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சீதக்காதியில் பார்வதி
இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் சீதக்காதி. விஜய் சேதுபதியின் 25வது படம் இது. சமூக வலைதளங்களிலும் பார்வதி மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவரது இன்ஸ்டாராகிராம் பாலோயர்ஸ் 1.2 மில்லியனை தாண்டியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
அவ்வப்போது இவர் போட்டோ ஷூட்கள் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இவை அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது. விதவிதமான உடைகளில் கவர்ச்சியால் தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சிறப்பான வீடியோ
இந்நிலையில் தற்போது இவர் அழகான புடவை மற்றும் நகைகளை அணிந்துக் கொண்டு இடுப்பை நளினமாக வளைத்து நெளித்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கையில் தாமரைப்பூவை வைத்துக் கொண்டு இவர் செய்யும் செய்கைகளும் அள்ளுகிறது. இந்த வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. பார்ப்பதற்கு நகைக்கடை விளம்பரம் போல இந்த வீடியோ உள்ளது.


Click it and Unblock the Notifications











