Parvati Nair : அழகை நச்சுனு காட்டி நிற்கும் பார்வதி நாயர்.. வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்த பல நடிகைகளில் தனித்துவமானவர் நடிகை பார்வதி நாயர். அழகி போட்டிகளில் கலந்து கொண்டு தனது பயணத்தை தொடங்கிய அவர், "நேவி குயின்" (Navy Queen) அழகி பட்டத்தை வென்று கவனம் பெற்றார். அதன் பின்னர் மாடலிங் துறையில் பிஸியாக இருந்து, விளம்பரங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வந்த அவர், பின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பார்வதி நாயர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களாக நடித்த அவர், பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த படம் என்னை அறிந்தால். அஜித் நடித்த இந்த படத்தில் பார்வதி நாயர் அருண் விஜய்யின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதுடன், பார்வதி நாயருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Parvati Nair photos
Photo Credit:

நடிகை பார்வதி நாயர்: அதன்பிறகு, பார்வதி நாயர் கமலின் உத்தமவில்லன் படத்தில் சிறிய ரோலில் நடித்தாலும், அந்த கதாபாத்திரம் கவனத்தை ஈர்த்தது. அதே போல, கோடிட்ட இடங்களை நிரப்புக, உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர், விஜய் சேதுபதியுடன் சீதாகாதி, வைபவுடன் ஆளம்பனா போன்ற திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செம்ம அழகு: கடந்த ஆண்டு நடிகை பார்வதி நாயர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவிலும், மாடலிங் துறையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் இவர், வெள்ளை மற்றும் கருப்பு நிற புடவையில் எடுத்துள்ள புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் "ஸ்டன்னிங்", "செம்ம அழகு", "கிளாமர் குயின்" போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், இன்ஸ்டாகிராமில் சுமார் 2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X