பசங்க படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது? அட அடையாளமே தெரியலையே.. என்னம்மா வளர்ந்துவிட்டார்!

சென்னை: தமிழ்ச் சினிமாவில் குழந்தைகளின் உலகத்தை மிகவும் இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் காட்டிய ஒரு முக்கியமான படம் என்றார் அது 'பசங்க' படம் தான். இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், பள்ளி குழந்தைகளின் தினசரி வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் போட்டி, நட்பு, சண்டை, ஆசைகள் எல்லாவற்றையும் மிக எளிமையான சொல்லப்பட்டு இருக்கும் அந்த படத்தில் நடித்த குட்டி பெண் இப்போது வளர்ந்து பெரியவளாகி அனைவரையும் வாய் பிளாக்க வைத்துள்ளார்.

ஹிட்டடித்த படம்: 'பசங்க' திரைப்படத்தில் பெரிய நட்சத்திரங்களை விட குழந்தை நடிகர்களின் நடிப்பு தான் அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. ஒவ்வொரு சிறு கதாபாத்திரமும் இயல்பாக இருக்கும் அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்திருந்தார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்களின் பார்வையில் உலகம் எப்படி தெரிகிறது என்பதை படம் உணர்ச்சியாகவும், சில நேரங்களில் நகைச்சுவையாகவும் காட்டியது. அதனால் தான் இந்த படம் வெளியான பிறகும் பல ஆண்டுகள் கழித்து கூட ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.

Pasanga Actress Tharini

குட்டிப்பெண்ணா இது: இந்த படத்தில் மனோன்மணி ரோலில் குட்டிப் பெண்ணாக நடித்தவர் தான் நடிகை தாரிணி. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், அதன்பின், கார்த்தி, லட்சுமி மேனன் நடித்த 'கொம்பன்' படத்தில் லட்சுமி மேனனின் தோழியாக நடித்திருந்தார். தற்போது, நடிகைதாரிணி பாண்டியராஜ் இயக்கத்தில் ஊர்வசி, ஜெயராம், மிஷ்கின், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன் ஆகியோர் நடித்து இருக்கும் 'பரிமளா அண்ட் கோ' திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

Pasanga Actress Tharini

திருமணமாகிவிட்டது: Lyca Productions சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜி தமிழ்குமரன் தயாரித்துள்ள இப்படம் மே 28ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், நடிகை தாரிணி பேசிய புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில், எனக்கு திருமணமாகிவிட்டது என்றும் குடும்பத்தையும் கணவரையும் கவனித்துக்கொண்டு வீட்டில் இருக்கிறேன். கொம்பன் படத்திற்கு பின் 7 வருடம் கழித்து தற்போது பரிமளா அண்ட் கோ படத்தில் நடித்து இருக்கிறேன், இந்த படம் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று பேசி உள்ளார். அந்த வீடியோவில் தாரிணியை பார்த்த ரசிகர்கள் பலர் பசங்க படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது, "இவ்வளவு பெரியவளாக வளர்ந்துட்டாங்களா?" என்று ஆர்வமாக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X