'கட்டமா ராயுடு'... பவன் கல்யாணுடன் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன்!

By Shankar

அஜீத் - தமன்னா நடித்து வெளியான வீரம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்கிறார்கள் அல்லவா...

இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்.

Pawan - Shruthi pair up again for Kattamarayudu

இந்தப் படத்துக்கு கட்டமா ராயுடு என்று தலைப்பிட்டுள்ளனர். பெரும் வெற்றி பெற்ற கப்பார் சிங் படத்தைத் தொடர்ந்து பவன் - ஸ்ருதி ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. வேக வேகமாகப் படமாக்கபட்ட இந்தப் படம், இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சியைத் தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கு கூடிய மக்கள் எழுப்பிய ஆரவாரம் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

"வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் இந்தப் படம் ஸ்ருதி ஹாசனை தென்னிந்திய திரை உலகில் மேலும் உச்சத்தில் உயர்த்தி செல்லும்," என்கிறார் படத்தின் இயக்குநர் கிஷோர் பர்தசானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X