நான் உடலுறவு வைத்து 9 ஆண்டுகள் ஆகிறது.. இர்ஃபான் பதான் என்னை ஏமாத்திட்டாரு.. பிரபல நடிகை பகீர்!
மும்பை: பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என பரபரப்பை கிளப்பிய பயல் கோஷ் தற்போது கடந்த 9 ஆண்டுகளாக தான் யாரிடமும் உடலுறவு வைத்திருக்கவில்லை என பகீர் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். மேலும், பிரபல கிரிக்கெட் வீரரும் கோப்ரா படத்தின் நடிகருமான இர்ஃபான் பதான் தன்னை ஏமாற்றி விட்டார் என பதிவிட்டு பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் இருப்பதாக பல நடிகைகள் மறைமுகமாக சொல்லி வந்த நிலையில், சில நடிகைகள் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர்.

அனுராக் காஷ்யப் மீது இவர் வைத்த மோசமான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இவர் மீது மான நஷ்ட வழக்கும் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனுராக் காஷ்யப் மீது புகார்: சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை கெடுத்து விட்டார் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்து பரபரப்பை கிளப்பினார் பயல் கோஷ். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள், லியோ மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா உள்ளிட்ட படங்களில் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார்.
ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: அனுராக் காஷ்யப்புக்கு எதிரான புகாரை நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் எதிர்த்தனர். பாலிவுட்டில் யாருமே பயல் கோஷுக்கு ஆதரவு குரல் கொடுக்கவில்லை. நடிகை ரிச்சா சத்தாவை தேவையில்லாமல் அனுராக் காஷ்யப் மேட்டரில் இழுத்து விட்ட பயல் கோஷுக்கு எதிராக 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கை ரிச்சா சத்தா போட்டுள்ளார். அதன் பின்னர் ரிச்சா சத்தாவிடம் மன்னிப்புக் கேட்க அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இர்ஃபான் பதான் மீது பழி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் சியான் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் போலீஸ் அதிகாரியுமாக நடித்த இர்ஃபான் பதான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார் என்றும் கடைசியாக அவருடன் மட்டும் தான் உடலுறவு கொண்டேன். அதன் பின்னர் 9 ஆண்டுகளாக யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. பல பெரிய நடிகர்கள் என்னுடன் படுக்கை பகிர ஆசைப்பட்டனர். ஆனால், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி என்னை இர்ஃபான் பதான் ஏமாற்றி விட்டார் என பயல் கோஷ் தற்போது பகீர் கிளப்பும் போஸ்ட்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு இதே வேலையா போச்சு என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











