இர்ஃபான் பதான் மீது குற்றம்சாட்டிய நடிகை கதறி அழும் வீடியோ.. என்ன காரணம் தெரியுமா?
மும்பை: நடிகை பயல் கோஷ் சமீபத்தில் 9 ஆண்டுகளாக தான் யாருடனும் உடலுறவு வைத்திருக்கவில்லை என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கோப்ரா பட நடிகருமான இர்ஃபான் பதான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டார் என புகார் அளித்திருந்தார்.
அதற்கு முன்னதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டையும் முன் வைத்து பெரும் சர்ச்சையை கிளப்பியவர் தான் இந்த பயல் கோஷ். தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வரும் இவருக்கு சினிமாவில் நடிக்க பெரிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்ற சந்தோஷத்தில் கதறியழுது வீடியோ வெளியிட்ட பயல் கோஷை நெட்டிசன்கள் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.
கதறியழுத பயல் கோஷ்: வீடியோவில் தன்னை யாரோ அடித்து துன்புறுத்துவது போல நடிகை பயல் கோஷ் இந்தியா டி20 உலக கோப்பை வென்றதற்கு கதறியழுது வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னம்மா டிராமா பண்றாங்க உலக கோப்பை வின் பண்ண ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணியினரே இப்படி அழுது இருக்க மாட்டார்கள். எதையாவது பண்ணி லைம் லைட்டில் வர நினைக்கிறார் என கலாய்த்து தள்ளி விட்டனர்.
எகப்பட்ட ட்ரோல்: தொடர்ந்து நடிகை பயல் கோஷை ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்த நிலையில், அவர் ரொம்பவே கடுப்பாகி விட்டார். இந்தியா மீது உங்களுக்கு எல்லாம் பற்று இல்லையா என இந்தியில் திட்டி தற்போது இன்னொரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அது மேலும், பயல் கோஷுக்கு எதிரான ட்ரோல்களை அதிகரித்துள்ளது.
கெட்ட வார்த்தையில் திட்டிய நடிகை: நாட்டுப் பற்றே கொஞ்சம் கூட இல்லாதவர்கள் என்றும் மோசமான கெட்ட வார்த்தைகளிலும் திட்டியபடி பயல் கோஷ் போஸ்ட் வெளியிட்ட நிலையில், அதற்கு எதிராக நடிகையை நெட்டிசன்கள் பலர் அதே வார்த்தையை சொல்லி அசிங்கமாக திட்டி வருகின்றனர். தொடர்ந்து சர்ச்சைகளை மட்டும் கிளப்பி பிழைப்பு நடத்தாமல் நல்ல பட வாய்ப்புகளை தேடும் வழியை பாருங்க என ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications