கண்ணை மூடி கையை அப்படி வச்சு..இது என்ன போஸ்? வைரலாகும் பிரபல நடிகையின் கிரிஸ்டல் கிளியர் ஸ்டில்ஸ்

By

சென்னை: பிரபல நடிகை கண்ணை மூடி ஸ்டைலாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

லாக்டவுன், நடிகைகளை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட வைத்திருக்கிறது. பல நடிகைகள் இன்ஸ்டாவில் அடிக்ட் ஆகி உள்ளனர்.

தினமும் ஒன்றிரண்டு என்று போட்டோ போட்டு வருகின்றனர். இதற்கு வரும் கமென்ட்களையும் ஜாலிகேலி கலாய்களையும் தனியாக சிரித்து ரசிக்கிறார்கள்.

தினுசு தினுசா

தினுசு தினுசா

இதற்காகவே புதுசு புதுசா, தினுசு தினுசா போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் தங்களது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி புகைப்படங்கள், த்ரோபேக் போட்டோஸ்களை வெளியிட்டு வருகின்றனர். வெளிநாட்டு பீச்சுகளில் இருக்கும் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இந்த போட்டோக்களும் கன்னாபின்னா லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கான கமென்ட்களும் கிடைக்கின்றன.

பாயல் ராஜ்புத்

பாயல் ராஜ்புத்

அப்படி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், பாயல் ராஜ்புத். தமிழில், ஏஞ்சல் என்ற படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் லாக்டவுனுக்குப் பிறகு தொடங்கும் என்று தெரிகிறது. இந்தியில் வீர் கி வெட்டிங் படத்தில் நடித்த இவர், சில பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

டிஸ்கோ ராஜா

டிஸ்கோ ராஜா

கார்த்திகேயா நடித்த ஆர்எஸ் 100, வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்த வெங்கி மாமா, ரவிதேஜாவின் டிஸ்கோ ராஜா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாயல் ராஜ்புத், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்டிருந்த கியூட் புகைப்படங்கள் வைரலாகின. நேரம் கிடைக்கும்போது அவரே டிரெஸ் வடிவமைப்பிலும் கவனம் செலுத்துகிறார்.

Recommended Video

RX100 Payal Rajput #PillowChallenge | Prachi | Lock down Diaries
சட்டையை கழற்றி

சட்டையை கழற்றி

இவர் இப்போது வேற லெவல் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். கைகளை தலைக்கு மேலே வைத்து, கண்களை மூடி, சட்டையை கழற்றிவிட்டபடி எடுத்துள்ள புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலர், ஸ்டன்னிங் லுக் என்றும், மிரட்டலான போஸ் என்றும் வர்ணித்துள்ளனர். உங்கள் அழகுக்கு எல்லையே இல்லை என்று சிலர் கூறியுள்ளனர்.

கிரிஸ்டல் கிளியர்

கிரிஸ்டல் கிளியர்

உங்க முகம் இப்ப ரொம்ப அழகாயிடுச்சு, என்ன செஞ்சீங்க? என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். இன்னும் சில ரசிகர்கள், கிரிஸ்டல் கிளியர் போட்டோன்னா அதுதான். அப்படியே பளிச்சுன்னு தெரியறீங்க என்று கூறியுள்ளனர். ஏன் கண்ணை மூடிக்கிட்டீங்க. திறந்து பாருங்க என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். நீங்க நடிக்கிறதுக்கு ஒரு கதை வச்சிருக்கேன் என்று தெரிவித்துள்ள ஒரு நெட்டிசன், போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X