டேபிளில் ஃபுல் பாட்டில்.. கையில் சரக்கு கிளாஸ்.. அதுக்குத்தானா இது? பிரபல நடிகையின் தில் போஸ்!
சென்னை: பிரபல நடிகை சரக்கு பாட்டிலுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழில், கே.எஸ்.அதியமான் இயக்கும் ஏஞ்சல் என்ற படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார், பாயல் ராஜ்புத்.
இந்தியில் வீர் கி வெட்டிங் படம் மூலம் அறிமுகமான இந்த டெல்லி மாடல், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

டிஸ்கோ ராஜா
கார்த்திகேயா நடித்த ஆர்எஸ் 100, வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்த வெங்கி மாமா, ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாயல் ராஜ்புத், அடுத்து நரேந்திரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா டெஸ்ட்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாயல் ராஜ்புத், அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். கொரோனாவுக்கு பிறகு ஐதராபாத்துக்கு கடந்த மாதம் வந்த அவர், படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார். அப்போது அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் நடத்தப்பட்டது.

குழந்தை போல
பாயல் ராஜ்புத்துக்கு டெஸ்ட் நடந்தது. அப்போது திடீரென்று அவர் குழந்தையை போல அழுதார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 'உண்மையிலேயே பயந்து விட்டேன். மூக்கில் வைத்து சுழற்றியபோது பயங்கரமாக உணர்ந்தேன். நல்லவேளை நெகட்டிவ் என்று வந்திருக்கிறது என்று கூறியிருந்தார்.

பகீர் கிளப்பியது
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது, டேபிளில் ஃபுல் விஸ்கி பாட்டில் இருக்க, கையில் ஊற்றப்பட்ட பெக்குடன் சிரித்தபடி போஸ் கொடுக்கிறார் பாயல்.

அருமை பெருமை
கேப்ஷனில், அந்த விஸ்கியின் அருமை பெருமைகளை விவரித்திருக்கிறார். இதற்கு கடுமையான கண்டனங்கள் வரும் என்பதால் கமென்ட் ஆப்ஷனை மூடி வைத்துவிட்டார் பத்திரமாக. இருந்தாலும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்ஸ் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டு திட்டி வருகின்றனர்.

தைரியமாக யாரும்
என்னதான் மது குடிப்பவர்களாக இருந்தாலும் அதை இவ்வளவு தைரியமாக யாரும் போஸ்ட் பண்ணுவதில்லை. இது பணம் வாங்கிக்கொண்டு விளம்பரத்துக்காக கொடுத்த போஸ்தான் என்றாலும் நடிகை ஒருவர் இப்படி வெளிப்படையாக மதுகிளாஸுடன் போஸ் கொடுக்கலாமா?
என்று பலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











