ஜான்வி கபூர் மார்புக்கும் இடுப்புக்கும் தான் ஃபோகஸ்.. வெடித்த சர்ச்சை.. இயக்குநர் சரண்டர்!
மும்பை: பெத்தி படத்தில் ராம் சரண் பட்ட கஷ்டத்தை பற்றி எல்லாம் பேசாமல் ஜான்வி கபூரின் கவர்ச்சி காட்சிகள் பெரிய பஞ்சாயத்தை கிளப்பி கடுமையான விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி உள்ளன. ஜான்வி கபூரை தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே பயன்படுத்துவதாக பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அவரது இடுப்புக்கும் மார்புக்கும் மட்டுமே ஃபோகஸ் வைப்பதாகவும் முகத்தைக் கூட பெரிதாக காட்டவில்லை என கடும் கண்டனங்கள் ஆன்லைனில் குவிந்து வந்த நிலையில், முதன்முறையாக இந்த சர்ச்சைக்கு எதிராக வாய் திறந்து பேசியுள்ளார் புச்சி பாபு சனா.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் போராட்டத்தின் முடிவாக அவர் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் நானெல்லாம் வெறும் 2 வருஷம் தான் கஷ்டப்பட்டேன் என ராம்சரண் சென்னை பிரஸ்மீட்டில் புச்சி பாபு சனாவை பாராட்டியிருந்தார். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து பாக்ஸ் ஆபீஸ் கல்லா கட்டினாலும் இந்த ஜான்வி கபூர் சர்ச்சை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், டைரக்டர் மெளனத்தை கலைத்துள்ளார்.
கவர்ச்சி பொம்மையா ஜான்வி கபூர்?: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தியில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு டோலிவுட் திரையுலகில் தான் கிடைத்துள்ளது. முதல் படமே ஜூனியர் என்டிஆர் உடன் தேவரா படத்தில் கிடைக்க அந்த படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இந்நிலையில், ராம்சரண் உடன் நடித்துள்ள பெத்தி படத்திலும் கவர்ச்சிக்கு மட்டுமே ஜான்வி கபூர் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவரது முதல் காட்சியிலேயே மாராப்பை கழட்டி தீப்பந்தம் கொளுத்தி அவரது தேகத்தை காட்டும் விதமாக இடுப்புக்கும் மார்புக்கும் தான் ரத்னவேல் ஃபோகஸ் வைத்திருப்பார் என்றும் புச்சி பாபு சனா அப்படித்தான் ஹீரோயினை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும் கடுமையான ட்ரோல்கள் மற்றும் எதிர்ப்புகள் வெடித்த நிலையில், புச்சி பாபு சனா விளக்கம் கொடுத்துள்ளார்.

புச்சி பாபு சனா சரண்டர்: ராம் சரணுக்கும் ஜான்வி கபூருக்கும் ஜாலியான ஒரு விளையாட்டு காதல் ரொம்ப பிளேஃபுல்லாக இருக்க வேண்டும் என்றே அப்படி எழுதி படமாக்கினேன். ஆனால், இந்த விவகாரம் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என நினைக்கவில்லை. இது எனக்கும் ஒரு படிப்பினை தான். எதிர்காலத்தில் ஹீரோயின்களுக்கான காட்சிகளை அமைப்பதில் ரொம்பவே கவனத்துடன் செயல்படுவேன் என பேசியுள்ளார்.
சர்ச்சை காட்சி நீக்கம்: பெத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் குறித்து சமூகத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த காட்சிகளில் பெண்களை அவமதிக்கும் நோக்கம் ஏதும் இல்லை என்று அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். எனினும் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தாங்கள் மதிப்பதாக அவர் கூறினார். இதனால் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளைத் திரைப்படத்திலிருந்து நீக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.
திரைப்படம் என்பது பார்வையாளர்களை எப்போதுமே ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார். எந்தவொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் அல்லது சங்கடப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இருந்ததில்லை என்று அவர் விளக்கமளித்தார். படத்தின் சில காட்சிகள் அவ்வாறு இருந்ததாகப் பார்வையாளர்கள் உணர்ந்தால், அதற்குத் தாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களைக் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் சித்தரிக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது. மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறு கதைகளைச் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பகிர்ந்துகொண்ட பார்வையாளர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் மிகுந்த கவனமுடன் கதைகளை உருவாக்குவோம் என்று அவர் உறுதி அளித்தார்.
குறைந்த வசூல்: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான பெத்தி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 135 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் தளங்கள் 112 கோடி ரூபாய் தான் உலக வசூல் என தகவல் தெரிவித்தன. இந்நிலையில், 2வது நாளி உலகளவில் 40 கோடி மட்டுமே 2வது நாளில் வசூல் செய்து 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனிக்கிழமை வசூல் குறைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகரித்தால் மட்டுமே படம் பந்தயம் அடிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications