பெத்தி கிளாமர் சர்ச்சை.. ஜான்வி கபூரின் பழைய படங்களை கிண்டி கிளறும் நெட்டிசன்ஸ்.. அம்மாடியோவ் இப்படி எல்லாமா?
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை நம்பி, நடித்த படமான கேம் சேஞ்சர் படம் தான் ஊத்திக்கிச்சு, எப்படியாவது சரிந்த மார்க்கெட்டை சரி செய்துவிட வேண்டும் என்று தீவிரமாக போராடி, அடிபட்டு, கை, கால்களை எல்லாம் உடைத்துக் கொண்டு நடித்த பெத்தி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிடலாம் என்று ராம் சரண் நினைத்திருப்பார். ஆனால் நெட்டிசன்கள் எங்கிருந்துதான் படத்தை காலி செய்ய வேண்டும் என்று வருகிறார்களோ, என்று தெரியவில்லை என்று மொத்த படக்குழுவும் (ஜான்வி கபூர் தவிர) வருத்தத்தில் இருக்கிறார்கள்.
ஜான்வி கபூர் படத்தில் மொத்தமாகவே சுமார் 10 முதல் 15 நிமிட காட்சிகளுக்குத்தான் வருகிறார். ஆனாலும் படம் முழுவதும் இருப்பது போன்ற திரைக்கதை அமைப்பால், அவரது காட்சிகள் நீண்டு இருப்பது போல இருந்தாலும், இணையவாசிகள் பலரும் ஜான்வி கபூரின் கதாபாத்திர வடிவமைப்பை மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது, ஜான்வி கபூரின் கதாபாத்திரம் வெறுமனே கிளாமருக்காக மட்டுமே உள்ளது. ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தது மட்டும் இல்லாமல், அதை ரசிகர்களுக்கு காட்சி படுத்திய விதமும் மிகவும் கிளாமராக இருக்கிறது. கேமரா ஏங்கிளில் தொடங்கி, அவரது ஆடை வடிவமைப்பு வரை என இந்த விமர்சனங்கள் நீள்கிறது.

இந்த விமர்சனம் எழுந்த உடனே, இயக்குநர் புச்சி பாபு சனா ஜான்வி கபூரை வெறுமனே கிளாமர் காட்சிகளுக்காக பயன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனாலும் தற்போது முன் வைக்கப்பட்டுள்ள இந்த விமர்சனங்களுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்பது போன்ற அறிக்கையை வெளியிட்டு விட்டார். இந்த வருத்தத்திற்குப் பின்னர் இந்த பிரச்னை முடியும் என்று எதிர்பார்த்தால், மேலும் பூதாகரமாக கிளம்பியது.
பேமிலி ஆடியன்ஸ்: குறிப்பாக படத்தின் வசூலை காலி செய்ய, படம் முழுக்க கிளாமர் காட்சிகள், ஜா
ன்வி கபூர் காட்சிகளை எல்லாம் எப்படி குடும்பமாக அமர்ந்து பார்ப்பது என்ற கேள்வியை முன் வைக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் படத்திற்கு குடும்பமாக வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது. பிரச்னை இப்படி மாறும் போதாவது, ஜான்வி கபூர், தனது தரப்பில் இருந்து கருத்து தெரிவித்து, பரப்பப்படும் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பார்த்தால், இதுவரையிலும் கப்சிப்.சர்ச்சைக்குரிய காட்சி: இப்படி இருக்கையில் தற்போது நெட்டிசன்கள் பலரும் ஜான்வி கபூருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். அதாவது, அவரது முந்தைய படங்களில் அவர் நடித்த காட்சிகள், அதுவும் கிளாமர் காட்சிகளைக் கடந்து, பாலியல் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய சில சர்ச்சைக்குரிய காட்சிகளை தேடி எடுத்து, இணையத்தில் பகிர்ந்து, ஜான்வி கபூரை விளாசுவதுடன் மட்டும் இல்லாமல், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களையும் விளாசி வருகிறார்கள்.

பதில் விமர்சனங்கள்: பெத்தி படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம் கிளாமராக சித்தரித்து, எக்போஸ் செய்துவிட்டார்கள் என்று விமர்சிப்பவர்கள், ஜான்வி கபூர், சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்ததை பகிர்ந்து, இப்படியான காட்சிகளில் ஜான்வி கபூர் நடித்த போது இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இப்படி விமர்சிப்பவர்களை நோக்கியும், நீங்கள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய காட்சியில் ஜான்வி அவரது விருப்பத்தில் தான் நடித்துள்ளார். ஆனால் பெத்தி படத்தில் அவரிடம் தெரிவித்து விட்டுத்தான் கேமரா அங்கிள்கள் அமைக்கப்பட்டதா என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications