Vijay - Trisha: அன்பை அசிங்கமா நினைக்காதீங்க.. விஜய்யோடு சேர்த்து வைத்து பேசியதற்கு த்ரிஷாவின் பதிலடி இதுவா?
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகம் சேர்த்து வைத்து விமர்சிக்கப்பட்ட நடிகர் நடிகைகளில் விஜய் மற்றும் த்ரிஷாவை சொல்லலாம். இவர்கள் இருவரும் கில்லி படத்தில் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். கடைசியாக இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த படம் லியோ. அதன் பின்னர் கோட் படத்தில் இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்கள். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு த்ரிஷா தெரிவித்த வாழ்த்தும் அதற்காக அவர் பகிர்ந்த புகைப்படமும் பெரும் பேசு பொருளாக மாறியது. த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவானது பலருக்கும் பதிலடி கொடுப்பது போல உள்ளது என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.
த்ரிஷா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நடிகை. மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் நடித்திருந்தாலும் அதற்கு முன்னர் இருந்தே அவர் துணை நடிகையாகவும் நடித்து வந்துள்ளார். பல நடிகர் நடிகைகள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவார்கள். ஆனால் த்ரிஷா மீது அதுபோன்று எந்த சர்ச்சைகளும் இல்லை. ஆனால் த்ரிஷாவை மோசமாக விமர்சிக்க பலரும் கையில் எடுக்கும் விஷயம் விஜய். அதேபோல் விஜய்யை மோசமாக விமர்சிக்க பலரும் கையில் எடுக்கும் விஷயம் த்ரிஷா.

விஜய் - த்ரிஷா: விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், இன்றைக்கு ஆளும் கட்சியாக உள்ள திமுக மேடையிலேயே விஜய் மற்றும் த்ரிஷாவை சேர்த்துவைத்து மோசமாக விமர்சித்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றதை பார்க்க முடிந்தது. அதேபோல் நெட்டிசன்கள் பலருமே விஜய்யை விமர்சிக்க த்ரிஷாவை வம்படியாக இழுத்துவிடுவார்கள். கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் மற்றும் த்ரிஷா தனியே பிரைவேட் ஜெட்டில் சென்றதுமே விமர்சனத்துக்கு உள்ளானது.
த்ரிஷாவின் வாழ்த்து: திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலருமே விஜய் த்ரிஷா குறித்து பட்டும் படாமலும் விமர்சித்து பேசியது தொடர்பான பல வீடியோக்கள் இப்போதும் யூடியூப் தளத்தில் உள்ளது. த்ரிஷாவும் விஜய்யும் நல்ல தோழர்களாக இருந்து வருகிறார்கள். மக்களால் அறியப்பட்ட நபர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் இருவர் குறித்தும் எல்லை கடந்து விமர்சிப்பது என்பது கூடாது.விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கு த்ரிஷாவின் பதிவுகள் கவனிக்கப்படுகிறது. விஜய்யின் 50 வது பிறந்த நாளுக்கு த்ரிஷா பிறந்த நாள் முடித்து விமர்சனம் செய்தார். அதேபோல், இந்த ஆண்டு இரவு 10 மணி சுமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதாவது த்ரிஷா தனித்து தெரிய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு வாழ்த்து தெரிவிக்கிறார் என பேசப்பட்டது.

த்ரிஷாவின் பதிலடி: இந்நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஸ்டோரி தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் அமைந்துள்ள என இணையவாசிகளும் ரசிகர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷாவின் பதிவில், " நீங்கள் அன்பால் நிறைந்து இருக்கும் போது, அது அசிங்கமான எண்ணம் கொண்ட மக்களை குழப்புகிறது" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











