என் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள்: கதறும் ப்ரீத்தி ஜிந்தா

மும்பை: வக்கிரப் புத்தி படைத்த சிலர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து உலா விட்டு வருகின்றனர் என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது குமுறல்களை கொட்டியுள்ளார்.

பிரபல நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அந்த அணி தற்போது தொடர் வெற்றிகள் பெற்று வரும் நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ப்ரீத்தி.

தனது டிவிட்டர் பக்கத்தில் ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள குமுறல்களிலிருந்து...

நடிப்பும் ஒரு தொழில் தான்...

நடிப்பும் ஒரு தொழில் தான்...

நான் பொருளாதார ரீதியில் யாரையும் நம்பியிருக்கக் கூடாது என்பதால்தான் நடிக்கவே வந்தேன். மற்ற எல்லா வேலைகளையும் போலத்தான் நடிப்பும்.

எதிர்பாராத வெற்றி...

எதிர்பாராத வெற்றி...

நான் படங்களில் நடிக்க வந்தபோது இவ்வளவு பெரிய நடிகை ஆவேன் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை. நமது செலவுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்தால் போதும் என்றுதான் நினைத்தேன். இதுவும் ஒரு வேலைதான். அதற்குரிய சம்பளத்தைத்தான் நான் பெற்றேன். ஆனால் எதிர்பாராத அளவுக்கு நான் பெரிய ஸ்டாராகி விட்டேன்.

நான் நானாக இல்லை...

நான் நானாக இல்லை...

நான் பிரபல நடிகையானதும் எனது சுயத்தை அனைவரும் மறந்து விட்டனர். நான் திரையில் எப்படித் தோன்றுகிறேனோ அதே போலவே பார்க்கின்றனர். எனது வாழ்க்கை மாறி விட்டது. என்னைச் சுற்றியிருந்தவர்களும் கூட மாறிப் போய் விட்டனர். நான் நானாகவே இருக்க முடியவில்லை.

அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்...

அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்...

என்னுடைய சுயத்தை நானே தேடிக் கண்டுபிடிக்க போராட வேண்டியுள்ளது. என்னைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. நான் இளமையாகவே இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

நானும் அழுவேன்... எனக்கும் வலிக்கும்

நானும் அழுவேன்... எனக்கும் வலிக்கும்

நான் சோகமாக இருக்க முடியவில்லை. எனக்கும் சோகம் வரும், அழுகை வரும் என்பதை யாரும் ஏற்க மறுக்கிறார்கள்.

ஈகோ பிடித்த சக நடிகர்கள்...

ஈகோ பிடித்த சக நடிகர்கள்...

என்னுடன் டேட்டிங்குக்கு ஆசைப்படும் பலரும் ஈகோ பிடித்தவர்களாக உள்ளனர். அவர்களை விட பிரபலமாக நான் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.

வக்கிர மனிதர்கள்...

வக்கிர மனிதர்கள்...

சில வக்கிர மனம் படைத்தவர்கள் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து இன்டர்நெட்டில் வெளியிடுகின்றனர். எனது முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வாண உடல்களுடன் சேர்த்து வெளியிடுகின்றனர்.

பிரபலத்தின் விலை....

பிரபலத்தின் விலை....

என்னை அவமானப்படுத்துகின்றனர். எனது தனித்தன்மையை சிதைக்கின்றனர். ஆனால் இதுகுறித்து நான் புகார் கூறக் கூடாது என்றும் அவர்கள் ஆசைப்படுகின்றனர். காரணம், நான் பிரபலம் என்பதால் இதையெல்லாம் சந்தித்துத்தான் ஆக வேண்டுமாம்....

என்ன கொடுமை சார் இது...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X