twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி

    |

    Recommended Video

    Nikki Galrani Speech: இவ்வளவு நாள் வெயிட் பண்ணினதுக்கு பலன் கிடைக்கப்போகுது- வீடியோ

    சென்னை: நாய்கள் வளர்ப்பவர்களுக்கு சில குறிப்புகளை கூறிய நிக்கி கல்ராணி, செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது எளிதானது. ஆனால் அதற்காக நீங்கள் போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். அவர்களும் குழந்தைகள் போல தான். பாசத்திற்காக ஏங்குவார்கள். அவர்களின் சுகாதாரம் மிக மிக முக்கியம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    நிக்கி கல்ராணி ஒரு மெழுகு சிலை போன்ற க்யூட்டான ஹீரோயின் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் மிகவும் அன்பானவர், பாசமானவர், அன்பிற்காக ஏங்குபவர், அதுவும் நாய்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் மிகுந்தவர் என்பது அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தவிர, மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    Pets are easy to grow at home-Nikki Galrani

    நிக்கியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினால், உடனே இரண்டு அழகிய நாய்க்குட்டிகள் வெளியில் தாவிக் குதித்து ஓடிவருகின்றன. ஒன்று சாம்பியன் மற்றுமொன்று கிங் காங்.

    நிக்கிக்கு நாய்கள் மீது இருக்கும் பாசத்தை பற்றி அவர் கூறுகையில், சிறு வயது முதலே நாய்கள் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் கடைக் குட்டியாக இருந்ததால் பெற்றோரின் செல்ல மகள். எனது சுட்டித்தனத்தால் என்னையே சமாளிக்க முடியாது என்பதால் நாய்கள் வளர்க்க என் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    இருப்பினும் எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்கள் எனக்கு ஒரு நாய்க் குட்டியை பரிசளித்தனர். அதை என் பெற்றோர்களால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால், பிற்காலத்தில் என்னை விடவும் எனது தாய் தான் ரோச்செர் மீது மிகுந்த பாசமாக இருந்தார். இன்றும் அவன் என் பெற்றோருடன் பெங்களூரில் தான் இருக்கிறான் என்று நாய்கள் மீது அவருக்கு இருக்கும் ஆசையை கூறினார் நிக்கி.

    மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்ததால் சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டேன். ஷூட்டிங் காரணமாக அடிக்கடி வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை வரும் என்பதால், இங்கு நாய் வளர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

    Pets are easy to grow at home-Nikki Galrani

    பெற்றோர்களும், நண்பர்களும் பெங்களூரில் இருப்பதால் சில மாதங்களிலேயே தனிமை என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு தான் சாம்பியனை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன். பிறகு சாம்பியன் தனிமையில் இருக்கிறான் என்பதால் அவனுக்கு துணையாக கிங் காங்கை அழைத்து வந்தேன். அவர்கள் இருவரும் முதலில் சண்டையிட்டு கொண்டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள்.

    நான் என் சூட்கேசை பேக் செய்தால், நான் வெளியூர் செல்கிறேன் என்பதை அறிந்து சூட்கேஸ் உள்ளே உட்கார்ந்து கொண்டு தர்ணா செய்வார். ஆனால் நான் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே அவர்கள் இருவரும் என் மீது தாவி குதித்து கொஞ்சுவதற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. அவர்கள் இருவருக்கும் மேட்சிங்காக துணிகளை ஷாப்பிங் செய்து வெளியில் செல்லும் போதெல்லாம் இரட்டையர்கள் போல கூட்டிசெல்வேன்.

    அடிக்கடி கடற்கரை, ஸ்பாவுக்கு கூட்டிசெல்வேன். என்னை விட அவர்கள் தான் அதிக அளவில் ஸ்பாவில் நேரத்தை செலவிடுவர். சாம்பியனின் பெற்றோர் இருவரும் நாய்களுக்கான ஷோக்களில் பரிசு வென்றவர்கள் என்பதால் அவனது ரத்தத்திலேயே சாம்பியன்ஷிப் இருக்கும் என்பதால் அவனுக்கு சாம்பியன் என்று பெயர் வைத்தேன். கிங் காங் மிகவும் குட்டியாக இருந்ததால் அவனுக்கு இந்த பெயர் வைத்தேன் என்று மிகவும் நெகிழ்ச்சியோடு கூறினார் நிக்கி கல்ராணி.

    நாய்கள் வளர்ப்பவர்களுக்கு சில குறிப்புகளை கூறினார் நிக்கி கல்ராணி. செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது எளிதானது. ஆனால் அதற்காக நீங்கள் போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். அவர்களும் குழந்தைகள் போல தான். பாசத்திற்காக ஏங்குவார்கள். அவர்களின் சுகாதாரம் மிக மிக முக்கியம். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். செல்ல பிராணிகள் தங்களது தேவைகளை கூற இயலாது அதனால் நாம் தான் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய அனுபவங்களை அக்கறையோடு கூறினார் நிக்கி கல்ராணி.

    இவ்வளவு இளகிய நெஞ்சம் படைத்தவரா நிக்கி என்ற அளவிற்கு ஆச்சரியமாய் இருக்கிறது. தற்போது நிக்கி, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இத்தனை பிஸியான பணியிலும் செல்லப் பிராணிகள் மீது அவருக்கு இருக்கும் அக்கறை அலாதியானது.

    English summary
    Nikki Galrani, who gave a few tips for dog breeders, said it was easy to raise a pet. But for that you need to spend enough time. They are just like children. You can only be healthy if they are healthy, she said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X