'பேட்ட' படத்துக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இப்படி ஒரு தொடர்பா... கௌசி ஹேப்பி அண்ணாச்சி!
பேட்ட டிரைலர் செம மாஸாக இருப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேட்ட திரைப்படம் தனது பிறந்தநாளில் வெளியாவதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உலகளவில் டிரெண்டிங்காகி வருகிறது. டிரைலர் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பேட்ட டிரைலர் குறித்து தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகளும் கருத்து பதிவு செய்து வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், "முதல் முறையாக எனது பிறந்தநாளை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஏனென்றால் அன்று தான் பேட்ட ரிலீசாகிறது. பேட்ட டிரைலர் சூப்பராக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டும் தான்", என தெரிவித்துள்ளார்.
பேட்ட திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறுது. அன்று தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் பிறந்தநாள். பேட்ட டிரைலர் பரபரப்பாக பேசப்பட்டு வேளையில், ஒரேயொரு டிவீட் போட்டு தன்னை பற்றியும் பேச வைத்துவிட்டார் இந்த யதார்த்த நடிகை.


Click it and Unblock the Notifications











