பேட்ட படத்துல ''ஜானுக்கு'' என்ன காஸ்டியூம்.. அதே ''96'' மஞ்சள் சுடிதாரா?.. திரிஷா க்யூட் பதில்!
பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் திரிஷா, ரஜினி மிகவும் ஒழுக்கமானவர் என்று கூறியுள்ளார்.
சென்னை: பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் திரிஷா, ரஜினி மிகவும் ஒழுக்கமானவர் என்று கூறியுள்ளார்.
சென்னையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

திரிஷா சரோ
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருக்கிறார். திரிஷா சரோ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். இதற்கான லுக் சில மணி நேரங்களுக்கு முன்புதான் வெளியானது.

96 படம்
இதில் திரிஷாவிடம் 96 படம் போல் இதிலும் மஞ்சள் சுடிதாரில் வருவீங்களா? என்ற கேள்வி எழுப்பினார்கள். அதற்கு திரிஷா, இதுல வேற போட்டு இருக்கேன் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த படத்தில் நான் புடவையில் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இன்னொருவர் முடியாது
மேலும், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் போல் இன்னொருவர் இருக்க முடியாது . அவர் மிகவும் ஒழுங்கமானவர். அவரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் மிகவும் சரியாக படப்பிடிப்புக்கு காலை 6 மணிக்கு வந்து விடுவார்.

எல்லோருக்கும் நன்றி
இது என் பல வருட கனவு. என்னுடைய கனவை நினைவாக்கிய கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி. திரைப்பட குழுவிற்கு நன்றி என்று த்ரிஷா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











