அட நம்ம 90ஸ் ஹீரோயின்ஸை பாருங்க.. மீனா போட்ட அட்டகாச போஸ்ட்.. அழகு இன்னமும் குறையலையே ப்பா

சென்னை: மீனா தமிழ் சினிமாவில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்தவர். 90களில் அவர் நடித்த ஏராளமான படங்கள் மெகா ஹிட்டாகி அவரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சூழல் இப்படி இருக்க வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். இந்தச் சூழலில் மீனா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் வந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களில் ரொம்பவே ஃபேமஸாக இருப்பவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த அவர் சிவாஜி, ரஜினி உள்ளிடோருடன் அப்போதே நடித்துவிட்டார். முக்கியமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மீனா குழந்தையாக நடித்தது பலரது பாராட்டை பெற்றது. மிகச்சிறந்த நடிகையாக வருவார் என்று அப்போதே அவர் பெயர் எடுத்துவிட்டார்.

Meena Sangeetha Roja

மெகா ஹிட்: மீனா வளர்ந்த பிறகு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழிலும் நடிக்க முடிவெடுத்த அவர் ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படத்தில் 1991ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் மீனா சோலையம்மா என்ற கேரக்டரை ஏற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

டாப் ஹீரோயின்: முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தனக்கு கிடைத்த நிறைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட அவர்; மறுபக்கம் அப்போது வளர்ந்துவந்த நடிகராக இருந்த அஜித் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

Meena Sangeetha Roja

திருமணம்: பிறகு வித்யாசாகர் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவரும் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். அதற்கு பிறகு நடிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். அந்த உயிரிழப்பு மீனாவை ரொம்பவே பாதித்தது. ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்த அவர் இப்போது நார்மலாக இருக்கிறார். அவ்வப்போது தனது காலத்து நடிகைகளை நேரில் சந்தித்து ஃபன் செய்தும்வருகிறார்.

Meena Sangeetha Roja

மீனாவின் பதிவு: இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதாவது நடிகைகள் ரோஜா, சங்கீதா, ரம்பா, மகேஸ்வரி ஆகியோரை நேற்று மாலை சந்தித்திருக்கிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, காதலோடு கூடிய அழகான மாலை என்று பதிவு செய்திருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அட 90ஸ் ஃபேவரைட் ஹீரோயின்ஸுக்கு இன்னும் அழகு குறையவே இல்லையே என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X