Samantha - ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

சென்னை: Samantha (சமந்தா) நடிகை சமந்தா ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

உச்சம் சென்ற கிராஃப்: திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் அது கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.

Photos of actress Samanthas trip to Georgia are trending on social media

மையோசிடிஸ்: இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

மீண்டும் களத்தில்: மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. பத்து கோடி ரூபாய்கூட அந்தப் படம் வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சமந்தாவின் கரியரில் சாகுந்தலம் பெரும் தோல்வி படமாக இணைந்திருக்கிறது.

சமந்தாவின் குஷி: அதே சமயம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அப்படத்துக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக அடி வாங்கியதால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்துக்கு அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருக்கும் குஷி படம் விரைவில் வெளியாகிறது. அந்தப் படத்தின் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனிலும் அவர் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே குஷி, சிட்டாடல் ஆகியவைகளின் மூலம் கம்பேக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சமந்தா.

ஜார்ஜியா: இந்நிலையில் நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அவர் செம ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Read more about: samantha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X