வீணா மாலிக்கும் ரசிகர்களின் கின்னஸ் சாதனை முத்தமும்…
மும்பை: முத்தமழை கேள்விப்பட்டிருப்பீர்கள் படித்திருப்பீர்கள் நிஜமாகவே அதை நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள் கவர்ச்சிப் புயல் வீணா மாலிக்கின் ரசிகர்கள். 29 வது பிறந்தநாளை ஒட்டி கின்னஸ் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர் வீணா மாலிக் ரசிகர்கள்.
ஒரு நிமிடத்தில் 100 பேருக்கு மேல் முத்தம் கொடுக்கலாம் என்ற உடன் உதடுகளில் 'நச்' என்று முத்தம் கொடுக்கலாம் என்று போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் வீணா மாலிக் கைகளை நீட்டி முத்தங்களை பெற்றுக் கொண்டார் ( நல்ல வேளை தப்பியது வீணா மாலிக் உதடுகள்)
100 பேருக்கும் அதிகமாக ஒரு நிமிடத்தில் 137 ஆண்கள் நடிகை வீணா மாலிக்கின் கையில் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
சினிமாவை பிரபலப்படுத்த ஸ்டண்ட் வீணா மாலிக் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு கின்னஸ் சாதனை படமாகும். இந்த படத்தை பிரபலப்படுத்த பிறந்த நாளை மையமாக வைத்து ஸ்டண்ட் அடித்துள்ளார் தயாரிப்பாளர்.

கேக்கில் படத்தின் பெயர்
பிப்ரவரி 26ம் தேதி 29 வது பிறந்தநாள் கொண்டாடிய வீணா விழாவில் வெட்டிய கேக்கில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
ஒரு நிமிடத்தில் வீணாவுக்கு ஒரு நிமிடத்தில் 100 முத்தங்களுக்கு மேல் கொடுக்கப்படவேண்டும் என்பது விதி. அப்படி நடந்தால் அது கின்னஸ் சாதனையாம்.
கைகளில் முத்தம் கொடுத்த ரசிகர்கள் இந்த முத்தப் போட்டியில் பங்கேற்க வந்த ரசிகர்கள் வீணாவின் கைகளில் முத்தம் கொடுத்து அசத்திவிட்டனர். இதில் வெற்றி வெற்றி பெறுபவர் பாலிவுட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இது பெரிய பரிசு
இந்த முத்த சாதனை நிகழ்ச்சி நடக்கப் போவது எனது பிறந்த நாளுக்குக் கிடைக்கும் பெரிய பரிசாக கருதுகிறேன் என்று வீணா கூறியிருந்தார்.

நன்றி கூறிய வீணா
கைகளில் உற்சாகமாக முத்தம் பெற்றுக் கொண்ட வீணா, இப்படி ஒரு சாதனை நிகழ்த்தும் வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி, இயக்குவர் ஹாரூன் ரஷீத் ஆகியோருக்கு நன்றி கூறியுள்ளார்.

புதிய கின்னஸ் சாதனை
இதற்கு முன் நடிகர் சல்மான் கையில் ஒரு நிமிடத்தில் 108 பேர் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். 2011ம் ஆண்டு "கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட் ஆப் இந்தியா தோடா'' என்ற டி.வி. நிகழ்ச்சியின் போது சல்மான் இந்த சாதனையை ஏற்படுத்தினார். இந்த சாதனையை பிறந்தநாளில் முறியடிக்க தான் திட்டமிட்டதாகவும் அதன்படி முறியடித்து விட்டதாகவும் வீணா கூறினார்.

படத்தை பிரபலப்படுத்த இப்படியா?
பாலிவுட்டில் படத்தை பிரபலப்படுத்த எப்படி எல்லாம் போட்டி வைக்கிறார்கள். நம் ஊரில் நடிகைகளின் அருகில் கூட போக விடமாட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

இன்னும் 19 சாதனை
இந்த படம் கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் படம் எனவே இன்னும் 19 சாதனைகளை முறியடிக்க வேண்டியுள்ளதாம். இதையும் வீணா மாலிக்தான் கூறினார்.


Click it and Unblock the Notifications











